தனி நபரையோ, கட்சியையோ மையபடுத்தி சினிமா எடுக்கக்கூடாது: திருமாவளவன்

  ஐஸ்வர்யா   | Last Modified : 08 Nov, 2018 05:52 pm
thirumavalavan-press-meet

கருத்துரிமை என்ற பெயரில் ஒரு கட்சியையோ, தனி நபரையோ மையப்படுத்தி சினிமா எடுக்கக்கூடாது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். 

ஈரோடு மாவட்டம் அவிநாசியில் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், “இலங்கையில் போர்க்குற்ற விசாரணை நடத்த ராஜபக்சே அனுமதிக்க மாட்டார் என்பதால் அவர் பிரதமராக தேர்ந்தெடுக்கப்படுவது தமிழ் மக்களுக்கும் இந்திய அரசுக்கும் மோசமான சூழலையே ஏற்படுத்தும். ஆகையால் இன்று இலங்கையில் ஆட்சி அமைய தமிழ் தேசிய கூட்டமைப்பு முக்கிய பங்குள்ளதால் அதனை சம்பந்தம் தலைமையிலான கூட்டனி சரியான முடிவை எடுக்க வேண்டும்.

கருத்துரிமை என்ற ஒரு கட்சியையோ, தனி நபரையோ மையப்படுத்தி சினிமா எடுக்கக்கூடாது. இப்படி சினிமா எடுப்பதை தான் வரவேற்கவில்லை. படம் எடுப்பவர்கள் பொதுவாக எடுக்கவேண்டும். மேலும் படம் வெளிவந்த பிறகு அதிகாரத்தை பயன்படுத்தி சர்கார் பட காட்சிகளை நீக்க சொல்வது என்பது சிந்திக்க வேண்டிய ஒன்று. 20 சட்டமன்ற உறுப்பினர்களின் பதவியிடங்கள் காலியாக உள்ள நிலையில் உடனடியாக தேர்தலை நடத்த வேண்டும்” என்று கூறினார். 

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close