இந்தியாவில் தாக்கத்தை ஏற்படுத்திய சர்கார்! 49P என்றால் என்ன?

  ஐஸ்வர்யா   | Last Modified : 08 Nov, 2018 06:33 pm

whats-ai-49p-act

தளபதி விஜய் நடிப்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு உலகம் முழுவதும் வெளியான சர்கார் படம் ஓட்டு மற்றும் 49பி (பிரிவு - ஓட்டு உரிமை) ஆகியவை தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. தமிழகத்தில் நிலவும், அரசியல் சூழலையும், அரசியல் பின்னணியையும் மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.   

49P என்றால் என்ன?

ஒருவரது ஓட்டு மற்றொருவரால், கள்ள ஓட்டாக பதிவு செய்யப்பட்டது எனில், தொடர்ந்து அவரது விருப்பத்திற்கு ஓட்டு போட வேண்டும் என்று நினைத்தால், வாக்குச்சாவடியில் வைக்கப்பட்டிருக்கும் விண்ணப்பம் 17B ஒன்றை பூர்த்தி செய்து, உரிய அதிகாரியிடம் கொடுத்து, அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு தகுந்த பதிலளிக்க வேண்டும். இது சரியாக இருந்தால், அவர்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டுமானாலும், வாக்களிக்கலாம். 

இதுவே அவர் பார்வையற்றவராக இருந்தால், வேறு ஒருவரது துணையுடன் செல்லக்கூடாது. மாறாக, அங்குள்ள தலைமை அதிகாரியின் உதவியுடன் சென்று அவர் வாக்களிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.  அரசியல் பின்னணிக் கதையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட சர்கார் படத்தில் விஜய் வெளிநாட்டிலிருந்து தனது வாக்கைப் பதிவு செய்ய இந்தியா வருகிறார். அங்கு வந்த பிறகு தான் அவருக்கு தனது ஓட்டு கள்ள ஓட்டாக பதிவாகியுள்ளது என்று தெரியவருகிறது. 

இதையடுத்து, அந்தத் தேர்தல் முடிவுகளை நிறுத்தி வைக்கச் சொல்லி நீதிமன்றம் செல்கிறார். 49P பிரிவின் படி விஜய் வாக்களிக்கலாம் என்று தீர்ப்பளித்த நீதிமன்றம் வாக்குச்சாவடி அமைக்கவும் உத்தரவிடுகிறது. இதைத் தொடர்ந்து தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்கள் தங்களது ஓட்டும் கள்ள ஓட்டாக பதிவு செய்யப்பட்டதால், தங்களுக்கும் வாக்களிக்க உரிமை வேண்டும் என்று 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் மனுதாக்கல் செய்கின்றனர். இதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், தேர்தல் ஆணையத்தின் ஆலோசனைப்படி, மறு தேர்தல் நடத்த உத்தரவிடுகிறது. 

இதையடுத்து என்ன நடக்கிறது என்பது சர்கார் படத்தின் மீதிக் கதை. இந்த நிலையில், இந்த 49P சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதோடு, முதல் முறையாக இந்தியா அளவிலும் டிரெண்டாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Newstm.in 
 

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.