கார் பார்க்கிங்கில் நிறுத்தியிருத்த 2 சொகுசு கார்களில் திடீரென தீ

  ஐஸ்வர்யா   | Last Modified : 08 Nov, 2018 06:34 pm
car-fire-at-chennai

சென்னையில் கார் பார்க்கிங்கில் நிறுத்தியிருத்த 2 சொகுசு கார்கள் திடீரென தீ பிடித்து எரிந்தது பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை கொத்தவால்சாவடி மணிகண்ட முதலி தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ் குமார் (55). இவருக்கு சொந்தமான காலிமனை வீடு அருகே உள்ளது. இந்த மனையில் பாரிமுனை நாராயண முதலி தெருவைச் சேர்ந்த மகாவீர் (39) என்பருக்கு சொந்தமான சொகுசு காரும் (Hondai Creta), பாரிமுனை பள்ளியப்பன் தெருவைச் சேர்ந்த ஜெகதீஷ் (26) என்பவருக்கு சொந்தமா சொகுசு காரும் (Mahendra,  XUV), நிறுத்தி வைத்திருந்தனர். இன்று அதிகாலையில் திடீரென 2 கார்களும் தீப்பிடித்து எரிந்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த தண்டையார்பேட்டை தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை வேகமாக அணைத்தனர். இதில் 2 கார்களும் முழுமையாக எரிந்து நாசமானது. இதில் யாருக்கும் காயமில்லை. 

தீ விபத்துக்கான காரணம் குறித்து கொத்தவால்சாவடி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அதே பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

இதேபோல் குர்கான் மேம்பாலத்தில் சென்றக்கொண்டிருந்த ஹோண்டா சிட்டி காரில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அப்போது காரை ஓட்டிக்கொண்டிருந்த உரிமையாளர் வெளியில் குதித்து உயிர் தப்பினார். அப்போது அங்கே வந்து கொண்டிருந்த ஆட்டோ மீது மோதிய கார், சிறிது நேரம் அதை தன்னுடன் இழுத்துச்சென்றது. ஆனால் நல்லவேளையாக ஆட்டோ ஓட்டிநரும் வெளியே குதித்து உயிர் பிழைத்தார். ஓடிக்கொண்டிருந்த காரின் திடீரென தீ விபத்து ஏற்படக் காரணம் என்ன என்று போலீசார் தொடர்ந்து ஆராய்ந்து வருகின்றனர்.

Newstm.in 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close