சர்கார் விவகாரம்: விமர்சனங்களை ஏற்கத்துணிவில்லாத அரசு விரைவில் தடம் புரளும்- கமல்ஹாசன்

  ஐஸ்வர்யா   | Last Modified : 08 Nov, 2018 06:59 pm
kamal-hassan-tweet

விமர்சனங்களை ஏற்கத்துணிவில்லாத அரசு விரைவில் தடம் புரளும் என மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், “முறையாக சான்றிதழ் பெற்று சர்கார் படம் வெளியாகியிருக்கிறது. அரசியல் வியாபாரிகள் கூட்டம் விரைவில் ஒழியும், நாடாளப்போகும் நல்லவர் கூட்டமே வெல்லும். சர்கார் படத்திற்கு சட்டவிரோதமான அரசியல் சூழ்ச்சிகள் மூலம் அழுத்தம் கொடுப்பது இந்த அரசுக்கு புதிதல்ல. விமர்சனங்களை ஏற்கத்துணிவில்லாத அரசு தடம் புரளும். அரசியல் வியாபாரிகள்  கூட்டம் விரைவில் ஒழியும்.நாடாளப்போகும் நல்லவர் கூட்டமே வெல்லும்” என்று பதிவிட்டுள்ளார்.

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close