ஏ.ஆர். முருகதாஸ் வீட்டுக்கு சென்ற போலீஸ்.... கடுப்பான விஷால்!

  Newstm Desk   | Last Modified : 09 Nov, 2018 02:41 am
police-in-ar-murugadoss-house-vishal-fumes

விஜய் நடிப்பில் வெளியாகியுள்ளார் சர்கார் படத்திற்கு எதிராக அதிமுக தொண்டர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், இயக்குனார் ஏ.ஆர்.முருகதாஸின் வீட்டுக்கு போலீசார் சென்றதாக அவர் தெரிவித்துள்ளார். 

பல்வேறு சர்ச்சைகளுக்கு நடுவே சர்கார் படம் தீபாவளியன்று வெளியானது. படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் கடும் எதிர்பார்ப்பு இருந்தது. இரு தினங்களில் 100 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது சர்கார். ஆனால், படத்தில் வரும் பல கட்சிகளும் வசனங்களும் தங்கள் கட்சியையும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவையும் அவமதிப்பதாக குற்றம் சாட்டி, மாநிலம் முழுவதும் அதிமுகவினர் போராட்டம் நடத்தினர். 

படத்தில் உள்ள சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க தயாரிப்பாளர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர். இந்நிலையில், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில், "நள்ளிரவு எனது வீட்டுக்கு வந்த போலீசார், கதவை பலமுறை சத்தமாக தட்டியுள்ளனர். நான் இல்லை என தெரிந்தவுடன் அங்கிருந்து சென்றுவிட்டனர். தற்போது எனது வீட்டுக்கு வெளியே போலீஸார் யாருமில்லை" என எழுதியிருந்தார்.

முருகதாஸின் ட்வீட்டுக்கு போலீஸ் வந்த விஷயம் குறித்து, தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் தனது ஆதங்கத்தை தெரிவித்தார். ட்விட்டரில் அவர், "ஏ.ஆர்.முருகதாஸ் வீட்டில் போலீசா? எதற்காக? எதுவும் நடக்கக்கூடாத விஷயம் நடந்துவிடாது என நம்புகிறேன். மறுபடியும் சொல்கிறேன். தணிக்கை முடிந்து மக்கள் பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு படத்திற்கு ஏன் இவ்வளவு எதிர்ப்பு" என தெரிவித்தார். 

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close