• வியட்நாம், ஆஸ்திரேலியாவுக்கு குடியரசுத் தலைவர் அரசுமுறைப் பயணம்
  • ஜனவரி பேரணி ஓர் திருப்புமுனை: மம்தா பானர்ஜி
  • தேனி, திருவாரூரில் இன்றும் பள்ளிகளுக்கு விடுமுறை
  • இன்று முதல் வழக்கம் போல் ரயில்கள் இயங்கும்: தெற்கு ரயில்வே
  • அரையிறுதியில் தமிழக ரோல்பால் அணிகள்

சென்னை விமான நிலையத்தில் காந்தி மூலை – கண்காட்சி

  சுஜாதா   | Last Modified : 09 Nov, 2018 08:27 am

mahatma-gandhi-corner-set-up-at-chennai-airport

மகாத்மா காந்தியடிகளின் 150 வது பிறந்த நாளைக் கொண்டாடும் வகையில் சென்னை விமான நிலையத்தில் காந்தி மூலை அமைக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்தின் உள்நாட்டு வருகை பகுதியில் காந்தியடிகளை நினைவு கூறும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்தக் கண்காட்சியை, இந்திய விமான ஆணையகத்தின் தலைவர்  அஞ்சலி மகாபாத்ரா அண்மையில் திறந்து வைத்தார்.

கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ள டயல் செய்யும் தொலைபேசியின் ரிசீவரை எடுத்து காதில் வைத்தால் காந்தியின் குரல் கேட்கும். மேலும், மகாராஷ்டிராவில் உள்ள சேவா கிராம் ஆசிரமத்தின் சிறிய மாதிரி, கைராட்டை, கலைப் பொருட்களின் மாதிரிகள், காந்தியடிகளின் தமிழ்நாட்டு வருகையையும், இங்குள்ள தலைவர்கள் மற்றும் பொதுமக்களுடன் அவர் உரையாடுவதையும் காட்டும் புகைப்படங்கள் ஆகியவை இந்தக் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன.

பயணிகள், குறிப்பாக அடுத்த தலைமுறைக்கு, தேசத் தந்தையின் வாழ்க்கையையும், பணிகளையும் எடுத்துரைக்கும் விதமாக பிரம்மாண்டமான திரைகளில் காந்தி திரைப்படங்கள், வீடியோக்களும் இங்கு திரையிடப்படுகின்றன. சென்னை விமான நிலையத்திற்கு வந்து போகும் பயணிகளை இந்தக் கண்காட்சி பெரிதும் ஈர்த்துள்ளது.

டெல்லி ராஜ்காட்டில் உள்ள தேசிய காந்தி அருங்காட்சியகத்துடன் இணைந்து சென்னை  விமான  நிலையம் இந்தக் கண்காட்சியை அமைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.