அனுமதியின்றி பேனர்: விஜய் ரசிகர்கள் மீது வழக்கு பதிவு

  Newstm Desk   | Last Modified : 09 Nov, 2018 09:26 am
case-filed-against-vijay-fans

தியேட்டர்களுக்கு  வெளியே அனுமதியின்றி சர்கார் படத்தின் பேனர்கள் வைத்ததால் நடிகர் விஜய்யின் ரசிகர்கள் மீது கரூர் மற்றும் திருவாரூரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள சர்கார் படம் குறித்து அறிவிக்கப்பட்ட நாள் முதல் பல சர்ச்சைகளை சந்தித்து வருகிறது. இதனையடுத்துபடம் வெளியாகி அந்த சர்ச்சைகள் இன்னும் அதிகரித்துள்ளது. 

ஆளும் அ.தி.மு.க அரசு சர்கார் படத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இன்று மேலும் ஒரு பிரச்னை எழுந்துள்ளது. பல்வேறு இடங்களில் அனுமதியின்றி விஜய் பேனர்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக திருவாரூரில் 21 விஜய் ரசிகர்கள் மீதும், கரூரில் 10 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அனுமதியின்றி பேனர்கள் வைத்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று நீதிமன்றம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close