மலேசியாவில் இருந்து மீண்டும் மணல் இறக்குமதி

  Newstm Desk   | Last Modified : 09 Nov, 2018 01:11 pm
malaysia-sand-in-10-days

மலேசியாவில் இருந்து மீண்டும் மணல் இறக்குமதி செய்ய ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் மணல் தட்டுப்பாடு காரணமாக கட்டுமான தொழில்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.  மணல் தட்டுப்பாட்டை சமாளிக்க மலேசியாவில் இருந்து மணல் இறக்குமதி செய்யப்பட்டது. கப்பல் மூலம் கொண்டு வரப்பட்ட மணல்  தூத்துக்குடி துறைமுகத்தில் இறக்கப்பட்டன. இந்த மணலை தென் மாவட்ட மக்கள் வாங்க வசதியாக இருந்தது.

இதைத் தொடர்ந்து கடந்த செப்டம்பர் மாதம் மலேசியாவில் இருந்து எண்ணூர் துறைமுகத்துக்கு 50 ஆயிரம் டன் மணல்  மீண்டும் இறக்குமதி செய்யப்பட்டது. ஒரு யூனிட் மணலுக்கு ரூ.10,350 என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. லாரி உரிமையாளர்கள் ஆன்-லைனில் பதிவு செய்து மலேசிய மணலை வாங்கி வந்தனர். தற்போது, எண்ணூர் துறைமுகத்தில்  500 லாரி அளவுக்குத்தான் மணல் உள்ளது. இதுவரை முன்பதிவு செய்தவர்களுக்குத்தான் இந்த மணலை விற்க முடியும் என்பதால் நேற்று மதியம் ஆன்-லைன் புக்கிங் நிறுத்தப்பட்டது. மேலும், மணல் இறக்குமதி செய்யப்பட்ட பின்பு தான்  முன்பதிவு தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழ்நாட்டில் மணல் தேவை அதிகம் இருப்பதை கருத்தில் கொண்டு மலேசியாவில் இருந்து மீண்டும் மணல் இறக்குமதி செய்ய ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக தெரிகிறது. மேலும், எண்ணூர் துறைமுகத்திற்கு  இன்னும் 10 நாட்களில் மணல் வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முறை ஆன்லைனில் முன்பதிவு செய்பவர்களுக்கு வீடு தேடி மணல் வினியோகம் செய்யும் நடைமுறை தொடங்கி வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close