சர்காருக்கு எதிராக சேலத்தில் போராட்டம்; பேனர்கள் கிழிப்பு

  Newstm Desk   | Last Modified : 09 Nov, 2018 03:18 pm
admk-protest-against-sarkar-movie-in-salem

சேலத்தில், சர்கார் படத்திற்கு எதிராக அ.தி.மு.கவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும், சர்கார் படத்தின் பேனர்களை கிழித்ததால், அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. 

விஜய், ஏ.ஆர்.ரகுமான், ஏ.ஆர் முருகதாஸ் என்ற மெகா கூட்டணியில் உருவான சர்கார் திரைப்படம் தீபாவளி அன்று வெளியானது. இப்படத்திலுள்ள கடுமையான அரசியல் வசனங்களால், சர்கார் படக்குழுவினர் தற்போது ஆளும் அ.தி.மு.கவினரின் கோபத்திற்கு ஆளாகியுள்ளனர். 

சர்கார் படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கக்கோரி நேற்று முதல் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அ.தி.மு.கவினர் போராட்டம் நடத்தி வரும் நிலையில், சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் ஒப்புக்கொண்டது. 

இருந்தாலும் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இன்றும் அ.தி.மு.கவினர் போராட்டம் நடத்துகின்றனர். மேலும், இன்று சேலத்தின் ஏ.ஆர்.ஆர்.எஸ் தியேட்டர் முன்பாக அ.தி.மு.கவினர் போராட்டம் நடத்தியதோடு விஜய் பட பேனர்களை கிழித்துள்ளனர். இதனால் அப்பகுதியில் ஒரு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close