சாமியார் சதுர்வேதி - தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு

  Newstm Desk   | Last Modified : 09 Nov, 2018 01:11 pm
chaturvedi-the-culprit-is-searched

பாலியல் தொடர்பான  வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சாமியார் சதுர்வேதியை, தேடப்படும் குற்றவாளியாக சென்னை மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீஸ் அறிவித்துள்ளது. 

தன்னை தானே சாமியார் என்று பிரகடனபடுத்தி கொண்டவர் சதுர்வேதி, அவருக்கு வெங்கடாசரவணன், பிரசன்ன வெங்கடாச்சாரியார் என்ற பெயரும்  உண்டு. இவர், சென்னை ஆழ்வார்பேட்டையில் ஸ்ரீராமானுஜர் மிஷன் என்ற பெயரில் அறக்கட்டளை நடத்தி வந்தார்.

கடந்த 2004 ஆம் ஆண்டு ஆழ்வார்பேட்டையைச் சேர்ந்த சுரேஷின் மனைவி, மற்றும் மகளை கடத்தி, இருவரையும்  பலாத்காரம் செய்ததாகவும், பலரிடம் நிலம்,வீடு, பணம் ஆகியவை மோசடி செய்ததாகவும் சதுர்வேதி மீது புகார் எழுந்தன. இது குறித்து விசாரணை நடத்திய போலீசார்  சதுர்வேதியை குண்டர் சட்டத்தில்  கைது செய்தனர்.  இதையடுத்து, குண்டர் சட்டத்தின் கீழ் சதுர்வேதி கைது செய்யப்பட்டது செல்லாது என உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை அடுத்து அவர் விடுதலை செய்யப்பட்டார்.  

தொடர்ந்து மத்திய குற்றவியல் பிரிவு காவல்துறையினர்  நடத்திய விசாரணையில், கடந்த 2016ஆம் ஆண்டு சதுர்வேதி சாமியார்  மீண்டும் கைது செய்யப்பட்டார். சில தினங்களில் ஜாமினில் வெளிவந்த சாமியார்  தற்போது தலைமறைவாகி உள்ளார். 

இந்நிலையில், சதுர்வேதியை தேடப்படும் குற்றவாளியாக சென்னை மாநகர  மத்திய குற்றப்பிரிவு போலீசார் அறிவித்துள்ளனர். இவர் அடிக்கடி வட  மாநிலங்களுக்கும், நேபாள நாட்டுக்கும் ஆன்மிக சுற்றுலா சென்று வருவதால் நேபாளம் தப்பியிருக்க வாய்ப்பிருக்கலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.  

சதுர்வேதியின் புகைப்படங்கள் அனைத்து விமான நிலையங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து  வாரணாசி உள்ளிட்ட இடங்களில் போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். சாமியார் சதுர்வேதி மீது சென்னை மகளிர் நீதிமன்றத்தில் 14 ஆண்டுகளாக வழக்கு நடந்து வருவது குறிப்பிடத்தக்கது

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close