இளைஞர்களை கைது செய்ய வேண்டும் - நொச்சிக்குப்பம் பொதுமக்கள் புகார்

  Newstm Desk   | Last Modified : 09 Nov, 2018 04:21 pm

noccikkuppam-people-complaint

ரவுடி ஆகவேண்டும் என்ற நோக்கத்திற்காக கொலைவெறியுடன் தாக்கும் இளைஞர்களை கைது செய்ய வேண்டும் என நொச்சிக்குப்பம் பொதுமக்கள் மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

சென்னை பட்டினப்பாக்கம் அருகே உள்ள நொச்சிக்குப்பத்தை சேர்ந்தவர் காளி என்னும் காளிதாஸ். இவர் ரவுடி ஆக வேண்டும் என்பதற்காக அப்பகுதி மக்களை கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களால் தாக்கி வருகிறார். மேலும் தான்தான் குப்பத்தில் ரவுடி என்றும் தன்னிடமே மாமூல் தர வேண்டும் என்றும் கடை உரிமையாளர்களை மிரட்டுவதும், அடிப்பதும், ரகளை செய்வதுமாக இருந்து வருகிறார்.

நேற்று முன்தினம் நொச்சிக்குப்பம் பகுதி, சாலை ஓரத்தில் நின்றுகொண்டிருந்தவர்கள் மீது காளி அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் 6 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதுபோன்று  தொடர்ந்து காளி மற்றும் அவரது கூட்டாளிகளான சூர்யா, அப்துல், கலைவாணன் உள்ளிட்டோர் செய்து வரும் ரகளையால், பொதுமக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், காளி மற்றும் அவரது கூட்டாளிகள் 6 பேரையும் உடனே கைது செய்ய வேண்டும் என நொச்சிக்குப்பத்தை சேர்ந்த பொதுமக்கள் மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.  இதனடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். காளி உட்பட அவரது கூட்டாளிகள் மீது பல வழக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close