தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல்- வைகோ சாடல்

  ஐஸ்வர்யா   | Last Modified : 09 Nov, 2018 07:20 pm
vaiko-press-meet

தமிழகத்தில் கட்டுக்கடங்காத வகையில் ஊழல் மிகுந்துள்ளது. அனைத்து துறைகளிலும் ஊழல் புரையோடி கொண்டிருக்கிறது என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

தருமபுரி மாவட்டம்  அரூரில் செய்தியாளர்களை சந்தித்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ,  “தமிழகத்தில் கட்டுக்கடங்காத வகையில் ஊழல் மிகுந்துள்ளது. அனைத்து துறைகளிலும் ஊழல் புரையோடி கொண்டிருக்கிறது. தமிழக அமைச்சர்கள், முதலமைச்சர் மீதே ஊழல் குற்றச்சாட்டு, சிபிஐ விசாரணை, வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் நிர்வாகம் அடியோடு சீர்கெட்டுள்ளது. தமிழகத்தின் உரிமைகள் அழிக்கப்பட்டு வரும் சூழலில், வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் திமுக தலைமையில் மதசார்பற்ற கூட்டணி அமோக வெற்றி பெறும். 

இந்தியா முழுவதும் மோடிக்கு எதிரான அலை வீசி வருகிறது. இதன் விளைவு தான், கார்நாடக மாநிலத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. அதிகபட்ச வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்ற எடியூரப்பா குறைந்தபட்ச வாக்கு வித்தியாசத்தில்தான் வெற்று பெற்றுள்ளார். இந்நிலையில் மாநில கட்சிகளின் ஒருங்கிணைப்பிலே கூட்டணி அமைந்தால்தான், ஒரு கூட்டாட்சி தத்துவத்தை பாதுகாக்க முடியும். பாஜக ஒற்றையாட்சி முறையை கடைபிடித்து வருகிறது. கூட்டாட்சி அமைவதால், மத்தியில் குவிந்துள்ள உரிமைகளும், அதிகாரங்களும் பகிர்ந்து கிடைக்கும். இதை வலியுறுத்திதான், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, இன்று மாலை திமுக தலைவர் ஸ்டாலினை சந்திக்க உள்ளார். இது நல்ல நகர்வு. இது வெற்றி பெறும் என நம்புகிறேன்.  எனவே வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான ஆட்சி அமையாத சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என்று விரும்புகின்றோம். மத்திய அரசு மற்றும் அதிமுக அரசு மீது மக்களின் கோப உணர்ச்சி, வெறுப்பு அதிகமாகி வருகிறது. பெட்ரோல், டீசல் விலையை 15 முறை ஏற்றிவிட்டு, பைசா கணக்கில் குறைத்தால் மக்கள் ஏமாரமாட்டார்கள்” என கூறினார். 
 

Newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close