சர்கார் விவகாரம்: அதிகாரத்தை கையில் வைத்து அடக்க நினைப்பது தவறு- வாசன்

  ஐஸ்வர்யா   | Last Modified : 09 Nov, 2018 07:21 pm
gk-vasan-speech

சர்கார் படத்தை பொறுத்தவரை நல்ல கருத்துக்கள் இருந்தால் ஏற்று கொள்ள வேண்டும். கருத்து வேறுபாடு இருந்தால் பேச்சுவார்த்தை மூலமோ, சட்ட ரீதியாகவோ தீர்த்து கொள்ள வேண்டும். அதிகாரத்தை கையில் வைத்து கொண்டு அடக்க நினைப்பது ஒரு போதும் ஏற்புடையதல்ல என ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூரில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே வாசன், “சர்கார் படத்தை பொறுத்தவரை நல்ல கருத்துக்கள் இருந்தால் ஏற்று கொள்ள வேண்டும். கருத்து வேறுபாடு இருந்தால் பேச்சுவார்த்தை மூலமோ, சட்ட ரீதியாகவோ தீர்த்து கொள்ள வேண்டும். அதிகாரத்தை கையில் வைத்து கொண்டு அடக்க நினைப்பது ஒரு போதும் ஏற்புடையதல்ல.  இந்தியாவில் அதிக கஷ்ட, நஷ்டம் வரும் நிறுவனம் பட்டாசு நிறுவனம்தான். சீன பட்டாசுகளை ஏற்று கொள்ள கூடாது, அதை தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். 

கூடுதல் நேரத்தில் பட்டாசு வெடித்த சிறுவர்கள் முதல் பெரியர்கள் வரை அவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை நிபந்தனையின்றி வாபஸ் பெற வேண்டும். சுற்றுச்சூழல் மாசு மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் மிக மிக குறைவு. வரும் காலங்களில் தீபாவளி அன்று பட்டாசு வெடிக்கும் நேரத்தை அதிகரிக்க வேண்டும். தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடக்க வேண்டும், ஆனால் நடக்கவில்லை. இடைத்தேர்தல் நடக்குமா? நடக்காதா? என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. பல்வேறு முக்கிய திட்டங்களை கிடப்பில் போடப்பட்ட அரசாகவும், மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்க தவறிய அரசாகவும் அதிமுக உள்ளது. எந்த துறையை சார்ந்தவர்களும் அரசியலுக்கு வரலாம். அதில் சினிமா துறையும் ஒன்றுதான். ஜனநாயகத்தில் யாரும், யாரையும் மிரட்டவோ உருட்டவோ முடியாது. அதற்கு யாரும் இடம் கொடுக்க வேண்டிய அவசியமும் இல்லை” என்றார்.

Newstm.in 


 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close