பிரதமர் மோடி நல்ல எண்ணத்தில்தான் பணமதிப்பிழப்பு மேற்கொண்டார்- தம்பிதுரை

  ஐஸ்வர்யா   | Last Modified : 09 Nov, 2018 08:42 pm
thambi-durai-press-meet

பிரதமர் மோடி நல்ல எண்ணத்தில்தான் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்டார் என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார். 

திண்டுக்கலில் செய்தியாளர்களிடம் பேசிய மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, “தேர்தல் வருகின்ற காரணத்தினால் மத்திய அரசு பணமதிப்பிழப்பு செய்து இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்த நிலையிலும் காங்கிரஸார் தற்போது கருப்பு தினம் அனுசரித்து போராட்டம் நடத்துகிறார்கள். பிரதமர் மோடி நல்ல எண்ணத்தில்தான் பணமதிப்பிழப்பு கொண்டுவந்தார். இதனால் என்ன பலன் கிடைத்தது என்பதை சொல்ல நான் தயாராக இல்லை. பொருளாதாரத்தில் பயன் கிடைத்தது என கூறமுடியாது. பண மதிப்பிழப்பு காரணமாக மாநில அரசுகள் பயன் அடைந்துள்ளன. சர்கார் படத்தில் காட்சிகளை தற்போது நீக்கிய மத்திய சென்சார் ஏன் பட ஆய்வின்போது அந்த காட்சிகளை ஏன் நீக்கவில்லை. இந்த விவகாரத்தில் மத்திய சென்சார் போர்டு சரியாக நடந்து கொள்ளவில்லை என்பது தெரிகிறது”என்றார். 

தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்கள் தொகுதிகளில் டிடிவி தினகரன் தலைமையில் உண்ணாவிரதம் இருப்பது தொடர்பான கேள்விக்கு 18 எம்எல்ஏக்கள் தொகுதியில் மட்டும் எந்த அரசுத் திட்டங்களும் செயல்படுத்தவில்லை எனக் கூறுபவர்கள் 234 தொகுதிகளிலும் அரசு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு உள்ளதா என்பதை ஆராய வேண்டும் என கூறினார். 

Newstm.in 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close