ரயில் கொள்ளை: ரூ.5.78 கோடியை செலவு செய்து விட்டதாக கொள்ளையர்கள் வாக்குமூலம்

  Newstm Desk   | Last Modified : 09 Nov, 2018 09:30 pm
train-robbery

சென்னை ரயிலில் கொள்ளையடித்த ரூ.5.78 கோடியை செலவு செய்து விட்டதாக கொள்ளையர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2016ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8 ஆம் தேதி சேலத்தில் இருந்து சென்னை எழும்பூருக்கு புறப்பட்ட ரயிலில் ரூ.342 கோடி சேதமடைந்த ரூபாய் நோட்டுகள் 169 பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்தன. இந்த ரயில் பெட்டியின் மேற்கூரையில் துளையிட்டு 4 பெட்டிகளில் இருந்த ரூ.5.78 கோடி கொள்ளையடிக்கப்பட்டது. 

இச்சம்பவம் குறித்து சிபிசிஐடி போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், மத்தியப் பிரதேச மாநிலத்தை சேர்ந்த கொள்ளைக் கும்பல் இந்தப் பணத்தை கொள்ளையடித்திருப்பது சிபிசிஐடி அதிகாரிகளுக்கு தெரியவந்தது. இதையடுத்து, கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மோஹர்சிங்கையும், அவரது கூட்டாளிகளையும் கைது செய்ய முயற்சி மேற்கொண்டனர்.

இதனிடையே சென்னையில், பதுங்கியிருந்த மத்தியப் பிரதேச மாநிலம் ரட்லத்தைச் சேர்ந்த தினேஷ்,ரோஹன் பார்தி ஆகிய இருவரை சிபிசிஐடி அதிகாரிகள் கடந்த 12-ஆம் தேதி கைது செய்தனர். மேலும், குணா மத்திய சிறையிலும், அசோக்நகர் சிறையிலும் அடைக்கப்பட்டிருந்த கொள்ளைக் கும்பல் தலைவன் மோஹர் சிங், உட்பட 5 பேரை சிஐடி அதிகாரிகள் கடந்த திங்கள் கிழமை கைது செய்தனர். அவர்களை  அங்குள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பிடிவாரண்ட் பெற்று சென்னைக்கு அழைத்து வந்து போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், கொள்ளையடிக்கப்பட்ட ரூ.5.78 கோடியை பங்கு போட்டு செலவு செய்துவிட்டதாக கொள்ளையர்கள் தெரிவித்துள்ளனர். கொள்ளையடிக்கப்பட்ட பணத்தில், தங்கம் அல்லது சொத்து ஏதேனும் வாங்கியுள்ளனரா என காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close