மது குடிக்க வருமாறு அரசு யாரையும் வீட்டிற்கு சென்று அழைக்கவில்லை- அமைச்சர் தங்கமணி

  ஐஸ்வர்யா   | Last Modified : 09 Nov, 2018 06:48 pm
thangamani-press-meet

அரசு மதுகுடிக்க வருமாறு யாரையும் வீட்டிற்கு சென்று அரசு அழைக்கவில்லை அவர்களாகவே வந்துதான் மது குடிக்கின்றனர் என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். 

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த வெண்ணந்தூரில் தார்சாலை மற்றும் ஏரி தூர்வாறுதல் பூமி பூஜை நிகழ்ச்சியில் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி கலந்துக்கொண்டார். அதன்பிறகு பேசிய அவர், “அரசு மதுகுடிக்க வருமாறு யாரையும் வீட்டிற்கு சென்று அரசு அழைக்கவில்லை அவர்களாகவே வந்துதான் மது குடிக்கின்றனர்.  அரசு மது விற்பனைக்கு இலக்கு நிர்ணயிக்கவில்லை. மழை காலங்கலாக இருப்பதால் நிலக்கரி தடைபட கூடாது என்பதற்காக 16 ரேக்குகளிலிருந்து 20 ரேக்குகளாக  மத்திய அரசிடம் கேட்கப்பட்டுள்ளது. மத்திய தொகுப்பிலிருந்து 10 நாட்களுக்குள் 1000 மெகாவாட் கொடுப்பதாகவும்  1 மாததிற்குள் 6000 மெகாவாட் கொடுப்பதாக மத்தியஅரசு தெரிவித்துள்ளது” எனக் கூறினார்.

Newstm.in 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close