மருந்துகடையைவிட மதுகடை அதிகமாகவுள்ளது- கமல்ஹாசன்

  ஐஸ்வர்யா   | Last Modified : 09 Nov, 2018 07:15 pm
kamalhassan-speech

தமிழகத்தில் மருந்து கடைகளைவிட மதுக்கடைகள் அதிகமாக உள்ளன என மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 

தருமபுரி மாவட்டம் நல்லம் பள்ளியில் மக்கள் மத்தியில் பேசிய கமல்ஹாசன், “நல்லம்பள்ளி என்ற பெயரில் பள்ளி இருந்தாலும் இங்கு அரசு பள்ளி இல்லை, ஆனால் டாஸ்மாக் இருக்கிறது. உங்கள் கோபம் எல்லாம் எங்கள் கோபம். மக்கள் நீதி மய்யம் சொல்வது மது ஒழிப்பு அல்ல மது குறைப்பு, மருந்துக்கடைகள் குறைவாக உள்ளது ஆனால் டாஸ்மாக் கடைகள் பெருகிக்கிடக்கின்றன. தமிழகத்தில் மருந்து கடைகளைவிட மதுக்கடைகள் அதிகமாக உள்ளன. மக்கள் நீதி மய்யம் சொல்வது மது ஒழிப்பு அல்ல, மது குறைப்பு. அரசு செய்ய வேண்டியதை தனியாரும், தனியார் செய்ய வேண்டியதை அரசும் செய்வது அநியாயம்

காரிமங்கலம் சுற்றுலா தளமாக இருந்தும், அரசின் தவறால் அடிப்படை வசதி கூட இல்லாமல் உள்ளது. இங்கு பக்கத்தில் ஏரிகள் இருந்தும், ஆற்றில் தண்ணீர் வீணாகி வருகிறது. இங்கு பல்வேறு ஏரிகளுக்கு தண்ணீர் வரும் கால்வாய் தூர்வாராமல் கிடக்கிறது. 40 ஆண்டுகளாக இந்த தலைமுறையை குடிகாரர்களாக மாற்றியிருக்கிறோம். இதையெல்லாம் மாற்ற வேண்டும். இதில் நமது பங்கும் இருக்கிறது. ஒவ்வொரு ஊரில் ஒவ்வொரு பிரச்சினைகள் இருக்கிறது. அது எல்லாம் தீர்க்க கூடிய பிரச்சினைகள்தான்” என்று கூறினார். 

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close