ஆண்டிப்பட்டியில் அ.ம.மு.கவினர் உண்ணாவிரதம்!

  Newstm Desk   | Last Modified : 10 Nov, 2018 10:27 am
ammk-hunger-strike-against-tn-govt

தேனி ஆண்டிப்பட்டியில் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்காத தமிழக அரசை கண்டித்து அ.ம.மு.க சார்பில் தங்க தமிழ்ச்செல்வன் தலைமையில் உண்ணாவிரதம் நடைபெற்று வருகிறது. 

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில், அ.தி.மு.க அரசைக் கண்டித்து வரும் 10 ஆம் தேதி உண்ணாவிரத போராட்டம் நடைபெறுவதாக முன்னதாகவே அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு, அ.ம.மு.க நிர்வாகிகள் சார்பில் கடந்த ஒரு வாரமாகவே அங்கு ஏற்பாடுகள்  நடைபெற்று வந்தன. நேற்று தங்கத்தமிழ்செல்வன் இதற்கானபணிகளை பார்வையிட்டார். 

ஆண்டிப்பட்டி மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை தமிழக அரசு செய்து கொடுக்கவில்லை என அமமுக குற்றம்சாட்டி இந்த உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியுள்ளது. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close