மூர்மார்க்கெட் - கும்மிடிப்பூண்டி ரயில் சேவையில் மாற்றம்

  Newstm Desk   | Last Modified : 10 Nov, 2018 12:04 pm
change-the-train-service

பொன்னேரியில் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக, அந்த மார்கத்தில் இன்று மற்றும் நாளை இயக்கப்படும் மின்சார ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

இது குறித்து தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மூர்மார்க்கெட் - கும்மிடிப்பூண்டிக்கு இடையே சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை காலை 8.15, 9.30, 10.25 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில், மீஞ்சூர் வரை மட்டுமே இயக்கப்படும். மீஞ்சூர்-கும்மிடிப்பூண்டி இடையேயான போக்குவரத்து ரத்து செய்யப்படுகிறது. 

மூர்மார்க்கெட் -கும்மிடிப்பூண்டிக்கு காலை 9 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் எண்ணூர் வரை மட்டுமே இயக்கப்படும்.எண்ணூர்-கும்மிடிப்பூண்டி இடையேயான ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்படுகிறது. 
 கும்மிடிப்பூண்டி-மூர்மார்க்கெட் காம்ப்ளக்சுக்கு காலை 10.20, முற்பகல் 11.20, 11.50 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில், மீஞ்சூரில் இருந்து மூர் மார்க்கெட் காம்ப்ளக்ஸ் வரை இயக்கப்படும்.கும்மிடிப்பூண்டி-மீஞ்சூர் இடையேயான ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்படுகிறது.

சூலூர்பேட்டை- மூர்மார்க்கெட் காம்ப்ளக்சுக்கு பகல் 11.15 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் எண்ணூரில் இருந்து மூர்மார்க்கெட்காம்ப்ளக்ஸ் வரை மட்டுமே இயக்கப்படும். கும்மிடிப்பூண்டி-எண்ணூர் இடையேயான ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்படுகிறது என்று தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close