சென்னை - காங்கிரஸ் பிரமுகர் கொலை வழக்கில் மேலும் 6 பேர் கைது 

  ஐஸ்வர்யா   | Last Modified : 10 Nov, 2018 04:28 pm

chennai-crime

காங்கிரஸ் பிரமுகர் கொலை வழக்கில் கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து மேலும் 6 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சென்னை மீர்சாகிப்பேட் மார்கெட் அருகில் உள்ள டாக்டர் பெசண்ட் சாலையில் இந்திய இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் அப்பாஸ் என்பவரை மர்ம கும்பல் கடந்த 23ம் தேதி இரவு 11 மணியளவில் பயங்கர ஆயுதங்களை கொண்டு  தாக்கியதில் படுகாயம் அடைந்த அப்பாஸ் நிலைகொலைந்து சாலையில் விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதபமாக உயிரிழந்தார். பின்னர் இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஐஸ் ஹாவுஸ் போலீசார் அப்பாஸின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் கொலை நடந்த இடத்திற்கு அருகில் உள்ள கடைகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமிரா பதிவு ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர். 

இதற்கிடையில் அப்பாஸை கொலை செய்தவர்களை விரைவில் கைது செய்ய கோரி அப்பாஸின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அன்று  இராயப்பேட்டை பிணவரை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் அங்கு வந்த போலீசார் பேச்சு வார்த்தை நடத்திய பின்பு சாலை மறியலில் ஈடுப்பட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். மேலும் போலீஸ் விசாரணையில் அப்பாஸை முன்விரதம் காரணமாக கொலை செய்துள்ளதாக தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து மயிலாப்பூர் துணை ஆணையர் மயில்வாகனன் தலைமையில் 4 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். தற்போது  அப்பாஸ்  கொலை சம்பவம் தொடர்பாக இம்ரான் என்பவர் நாகப்பட்டணம் கோர்ட்டில் சரணடைந்தார். அதனைத் தொடர்ந்து அப்பாஸ் கொலை வழக்கில் கண்காணிப்பு கேமரா பதிவுகள் மூலம் அடையாளம் கண்டறிந்து சூர்யா, பொன்மணி, அப்பாஸ், கிஷோர் குமார், ஆகாஷ், எபினேசர்  ஆகிய 6 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
 

Newstm.in 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close