பணமதிப்பிழப்பு நடவடிக்கை நாட்டிற்கான புரட்சி- தமிழிசை

  ஐஸ்வர்யா   | Last Modified : 10 Nov, 2018 05:19 pm
tamilisai-press-meet

பண மதிப்பிழப்பு நடவடிக்கை நாட்டின் புரட்சிகரமான நடவடிக்கை என பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். 

பாஜக சார்பில் சென்னை வேளச்சேரியில் பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் ஏற்பட்டுள்ள நன்மைகள் குறித்த கருத்தரங்கம் இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய தமிழிசை, “பண மதிப்பிழப்பு நடவடிக்கை நாட்டின் புரட்சிகரமான நடவடிக்கை. பணமதிப்புழப்பு குறித்து தவறான கருத்துகளை எதிர்க்கட்சிகள் விதைத்துள்ளன. பணமதிப்பிழப்பு நடவடிக்கையால்  இன்றைய காலகட்டத்தில் நாட்டின் பொருளாதாரம் வரைமுறை படுத்தப்பட்டுள்ளது என்பது மட்டும் இல்லாமல் கணக்கு காட்ட வேண்டும் என்ற எண்ணமும் வரி கட்ட வேண்டும் என்ற எண்ணமும் மக்களிடையே அதிகரித்துள்ளது. பல லட்சம் போலி நிறுவனங்களை வைத்துள்ளவர்களும், பல லட்சம் கணக்கை மறைத்தவர்களுமே பண மதிப்பிழப்பை எதிர்க்கின்றனர். சந்திரபாபு நாயுடு சந்தித்து வரும் நபர்கள் பாஜகவிடம் தோல்வி அடைந்தவர்கள். எத்தனை சந்திரபாபு நாயுடுகள் எத்தனை ஸ்டாலின்கள் வந்தாலும் மோடியை அசைத்துப்பார்க்க கூட முடியாது” என்று கூறினார். 

Newstm.in 


 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close