குற்றவாளியை துரத்தி பிடித்த உதவி ஆய்வாளருக்கு ஏ.கே.விஸ்வநாதன் பாராட்டு

  Newstm Desk   | Last Modified : 10 Nov, 2018 05:19 pm
congratulate-in-a-k-vishwanathan

செல்போன் திருட்டில் தேடபட்டு வந்த குற்றவாளியை துரத்தி பிடித்த உதவி ஆய்வாளருக்கு, சென்னை பெருநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் இன்று நேரில் பாராட்டு தெரிவித்தார். 

சென்னை, யானைக்கவுணி காவல் நிலைய உதவி ஆய்வாளர் கர்ணன் என்பவர் நேற்றிரவு அம்மன் கோவில் தெரு மற்றும் வால்டாக்ஸ் சாலையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது,  அவ்வழியாக வந்த நபர் ஒருவர், உதவி ஆய்வாளர் கர்ணன் நிற்பதை கண்டு வாகனத்தை திருப்பி சென்றுள்ளார். இதில் சந்தேகமடைந்த உதவி ஆய்வாளர், அவரை பின்தொடர்ந்து சென்று, துரத்தி பிடித்து விசாரித்தார். முன்னுக்கு பின் முரணாக பதிலளித்ததால், அவரை காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று  விசாரணை நடத்தினார். முதற்கட்ட விசாரணையில், அவர் தண்டையார்பேட்டையை சேர்ந்த மணி என்பதும், அவர் மீது மூன்று காவல்நிலையத்தில் வழிபறி வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, தேடப்பட்டு வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து திருடப்பட்ட 3 விலையுயர்ந்த செல்போன் மற்றும் இருசக்கரவாகனத்தை பறிமுதல் செய்த காவல்துறையினர், மணியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 

இந்நிலையில், விழிப்புடன் செயல்பட்டு, குற்றவாளியை துரத்தி பிடித்த யானைக்கவுணி காவல்நிலைய உதவி ஆய்வாளர் கர்ணனுக்கு சென்னை காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் நேரில் பாராட்டு தெரிவித்தார். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close