பண மோசடி செய்த மாநகராட்சி ஊழியர் கைது 

  Newstm Desk   | Last Modified : 10 Nov, 2018 05:49 pm
municipal-employee-arrested-for-money-laundering

மின்சார துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டு வந்த சென்னை மாநகராட்சி ஊழியரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

சென்னை மாநகராட்சி சுகாதார பிரிவில் கொசு மருந்து தெளிக்கும் வேலை செய்பவர் கர்ணன். இவர், கிண்டியை சேர்ந்த தரணிதரன் என்ற இளைஞருக்கும் அவரது உறவினருக்கும் மின்சாரத்துறையில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி கடந்த 2016 ஆம் ஆண்டு ரூ.7,50,000 ரூபாய் பணம் வாங்கியுள்ளார். இதுவரை வேலை வாங்கித்தராமலும், வாங்கிய பணத்தை திருப்பி தராமலும் கர்ணன் இழுத்தடித்துள்ளார். இதனால் பொறுமை இழந்த தரணிதரன் நேற்று ராயபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் கர்ணனை கைது செய்து விசாரணை நடத்தினர்.  விசாரணையில், கர்ணன் பலரிடம் வேலை வாங்கி தருவதாக கூறி இதுவரை ரூ.17,30,000 ரூபாய் ஏமாற்றி உள்ளது தெரியவந்துள்ளது. தொடாந்து காவல்துறையினர்  விசாரணை நடத்தி  வருகின்றனர்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close