முதல்வர் சந்திக்க மறுப்பு தெரிவித்தால் போராட்டம்: சத்துணவு ஊழியர்கள்

  Newstm Desk   | Last Modified : 10 Nov, 2018 05:50 pm
nutrition-staff-announce-struggle

சத்துணவு ஊழியர்களின்  கோரிக்கை தொடர்பாக வரும் 15 ம் தேதி முதல்வரை சந்தித்து முறையிட உள்ளதாகவும், முதல்வர் சந்திக்க மறுப்பு தெரிவித்தால்  போராட்டத்தில் ஈடுபட உள்ளாதாகவும்  தெரிவித்துள்ளனர்.

சென்னை அண்ணாசாலையில் உள்ள தனியார் ஹோட்டலில் தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசி அதன் பொறுப்பாளர் வரதராஜன் , ஓய்வுதியம், பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 15 ம் தேதி முதலமைச்சரை சந்தித்து முறையிட உள்ளோம்.  முதல்வர் சந்திக்க மறுப்பு தெரிவித்தால்  போராட்டத்தில் ஈடுபடுவோம், தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற  சத்துணவு துறை அமைச்சர் இதுவரை  எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம்சாட்டினர்.

மேலும் மற்ற அரசு துறையில் பணி புரியும் பெண்களுக்கு மகப்பேறு விடுப்பு 9 மாதம்  கொடுப்பது போல் சத்துணவு துறையில் பணிபுரியும் பெண்களுக்கு மகப்பேறு விடுப்பு 9 மாதமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close