அவசர நிலை பிரகடன ஆட்சியை மோடி நடத்தி வருகிறார்: நாராயணசாமி

  ஐஸ்வர்யா   | Last Modified : 10 Nov, 2018 05:48 pm

narayana-samy-press-meet

இந்தியாவில் அறிவிக்கப்படாத அவசர நிலை பிரகடன ஆட்சியை பிரதமர் நரேந்திர மோடி நடத்தி வருகிறார் எனவும், பாஜக ஆட்சியை அகற்ற மதசார்பற்ற அணிகள் ஒன்றிணைந்து வருகிறது என புதுச்சேரி மாநில முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். 

புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் நாராயணசாமி, “பிரதமரின் பணமதிப்பிழப்பு கொள்கையால் நாட்டில் பல தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. கட்டுமான தொழில்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன, நாட்டில் வேலைவாய்ப்பில்லை. நாட்டின் பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் நாட்டில் 1.5 சதவீதம் பொருளாதாரம் குறைந்துள்ளது. பிரதமர் மோடியின் தவறான பொருளாதார கொள்கையால் நாட்டின் வளர்ச்சி பின்னோக்கி சென்று கொண்டிருக்கிறது. இதற்கு பிரதமர் நரேந்திர மோடி பொறுப்பேற்க வேண்டும்.

இந்தியாவில் அறிவிக்கப்படாத அவசர நிலை பிரகடன ஆட்சியை பிரதமர் நரேந்திர மோடி நடத்தி வருகிறார். பாஜக ஆட்சியை அகற்ற  மதசார்பற்ற அணிகள் ஒன்றிணைந்து வருகிறது. நாட்டின் ஜனநாயகத்தை காக்க வேண்டிய பொறுப்பை உணர்ந்து மோடி ஆட்சியை ஒழிக்க எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்பட்டு வருகின்றனர். இந்த முயற்சி  நிச்சயம் வெற்றி பெரும். நரேந்திர மோடியின் தவறான பொருளாதார கொள்கையால் நாட்டின் வளர்ச்சி பின்னோக்கி சென்று கொண்டிருக்கிறது. இதை தடுக்க வேண்டிய பொறுப்பு எதிர்கட்சிகளுக்கு உள்ளது” என்று கூறினார். 

Newstm.in 
 

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.