தமிழகத்தை மிரட்டவரும் ‘கஜா’ புயல்

  ஐஸ்வர்யா   | Last Modified : 10 Nov, 2018 05:52 pm
gaja-strom-formed

வங்க கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் உருவாகவுள்ள புயலுக்கு தாய்லாந்து சார்பில் கஜா என பெயரிடப்பட்டுள்ளது. வர்தா புயல் போன்ற தாக்கத்தை தற்போது உருவாகியுள்ள கஜா புயல் ஏற்படுத்தும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 48 மணி நேரத்தில் புயலாக மாறவுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு மற்றும் வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்து புயலாக மாறும். இந்த புயல் கடலூர் அருகே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கஜா என பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் கடந்த ஆண்டு ஏற்பட்ட வர்தா புயல் அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என கணிக்கப்பட்டுள்ளது. மேலும் மணிக்கு 30- 50 கிமீ வேகத்தில் காற்று வீசும் என்பதாலும் கடலின் தன்மை கடலூரை ஒட்டியுள்ள பகுதிகளில் மிக கடுமையாக இருக்கும் என்பதாலும் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. 

Newstm.in 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close