தந்தையை கொளுத்தியதாக அளிக்கப்பட்ட புகாரில் மகன்கள் கைது

  Newstm Desk   | Last Modified : 10 Nov, 2018 06:12 pm
the-sons-arrested-in-the-complaint-filed-against-burning-the-father

சென்னை ராயப்பேட்டையில் தந்தையை கொளுத்தியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் அவரது இரண்டு மகன்களை  காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை ராயப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சங்கர். இவருக்கு ராமசந்திரன், ராமகிருஷ்ணன் மற்றும் விஜய் என மூன்று மகன்கள் உள்ளனர். இதில் மூன்றாவது மகன் விஜயுடன் சங்கர் வசித்து வருகிறார். மூத்த மகன்கள் இருவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவர்கள் இருவரும் அதே பகுதியில் உள்ள வேறொரு வீட்டில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்றிரவு சங்கருக்கும், அவரது மூத்த மகன் ராமகிருஷ்ணனுக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் சங்கரை ராமகிருஷ்ணன் தாக்கியுள்ளார். இதனால் இளைய மகன் விஜய் அண்ணன் ராமகிருஷ்ணனை தாக்கிவிட்டு தந்தையை வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார்.

இதனிடையே, நேற்றிரவு தீடிரென சங்கர்  தீ பற்றி எரிந்த நிலையில் அலறி துடித்துள்ளார். சத்தம் கேட்டு  வந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  அவரது உடல் 90 சதவீதம் எரிந்துள்ள நிலையில் மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருக்கின்றனர்.  இந்நிலையில், இளைய மகன் விஜய், அண்ணன்கள் இருவரும்தான் தந்தையை தீ வைத்து எரித்ததாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் இரண்டு பேரையும் காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close