2 வருடமல்ல 2000 வருடங்களுக்கு அதிமுக ஆட்சி தொடரும்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

  ஐஸ்வர்யா   | Last Modified : 10 Nov, 2018 07:06 pm
rajendra-balaji-press-meet

2 வருடம் அல்ல 2000 வருடங்கள் ஆனாலும் அதிமுகவின் இந்த ஆட்சி தொடரும் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். 

ஸ்ரீவில்லிப்புத்தூரில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, “அதிமுக சார்பில் முதல்வர் பாராளுமன்ற தேர்தல் சம்பந்தமாக  அதற்கான வியூகங்களை நடத்தி வருகிறார். விரைவில் மற்ற கட்சி தலைவர்களை சந்தித்து பேசி பலமான கூட்டணி அமைத்து பாராளுமன்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெறுவதற்கான நடவடிக்கைகளை எடுப்பார். ஸ்டாலினுக்கு மட்டும் பிரதமர் ஆகும் தகுதி உண்டு என சந்திரபாபு நாயுடு கூறிகிறார். ஆனால் நாட்டில் உள்ள அத்தனை வாக்காளர்களுக்கும் பிரதமர் ஆகும் தகுதி இருக்கிறது. சந்திரபாபு நாயுடுதான் மோடியை பிரதமராக்க விடிய விடிய நடந்து ஓட்டு கேட்டார். பாஜகவின் அலையை வைத்துதான் முதல்வர் ஆனார். அவருக்கு ஒரு பிரச்சனை, அவர் கேட்ட கோரிக்கை நிறைவேறவில்லை என்பதால் பாஜகவைவிட்டு வெளியேறி வந்துள்ளார். 

அரசியலில் ஒவ்வொரு தலைவர்களும், கால சூழ்நிலைக்கு ஏற்ப தங்களது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்கின்றனர். மத்திய ஆட்சியில் பெரிய அளவில் குற்றங்கள், குறைகள் இல்லை. மக்கள் பணியில் அக்கரையோடுதான் உள்ளனர். ஆன்மீக ரீதியான ஆட்சியைத்தான் நடத்தி வருகிறார்கள். குறை சொல்ல வேண்டும் என்பதற்காக எதிர்கட்சிகள் சொல்லிக்கொண்டிருக்கின்றன. இடைத்தேர்தகில் குளருபடி செய்து தேர்தலை நிறுத்த முடியாது. தேர்தல் ஆணையம் வேடிக்கை பார்க்காது. மனிதாபிமான மிக்க எளிமையான ஒரு ஏழ்மையான, சாதாரண விவசாயியான எடப்பாடி பழனிசாமி, இந்த நாட்டை ஆள்வது பிடிக்காமல் உயர் மட்ட வகுப்பினர்கள் சதி செய்து வருகின்றனர். 2 வருடம் அல்ல 2000 வருடங்கள் ஆனாலும் இந்த ஆட்சி தொடரும். கமல் தேர்தலில் நின்று ஒரு சீட்டாவது ஜெயித்துவிட்டு அதன்பிறகு பேசட்டும். பிக் பாஸ் போல் அரசியல் களத்திலும் மீசையை முறுக்கி விட்டு நடத்தி பார்க்கலாம் என்ற கனவில் மிதக்கிறார், அது எடுபடாது. மதுவை நிறுத்தினால் எங்காவது எதையாவது குடிப்பார்கள். மது விற்பனையை நிறுத்தினால் பாண்டிச்சேரிக்கோ, கர்நாடகத்திற்கோ சென்று குடித்து உடம்பை கெடுத்து உயிரிழப்பார்கள். மது விற்க அரசு இலக்கு நிர்ணயிக்கவில்லை” என்று கூறினார். 
 

Newstm.in 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close