சினிமாவில் வந்த பிரபலத்தை வைத்து அரசியல் செய்யவில்லை- கமல்ஹாசன்

  ஐஸ்வர்யா   | Last Modified : 10 Nov, 2018 07:06 pm
kamalhaasan-speech

சினிமாவில் வந்து பிரபலத்தை வைத்து வரவில்லை. நல்ல அடித்தளத்தை வைத்தே அரசியலுக்கு வந்துள்ளேன் என மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொதுமக்களிடையே பேசிய கமல்ஹாசன், “ மக்கள் நீதி மய்யத்தின் செயல்பாடுகளை உலகம் போற்ற தொடங்கியுள்ளது.கொஞ்சம் கொஞ்சமாக நல்லது செய்ய நேரமில்லை, மொத்தமாக செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது. உங்களது வாக்கை நல்லவர்களுக்கு வழங்குங்கள். காசுக்கு விற்காதீர்கள். இப்படி கெஞ்ச வேண்டிய நிலையுள்ளது. உங்களது சட்டையிலிருந்து கோடி, கோடியாக எடுத்துக் கொண்டு, உங்களுக்கு 1000 ரூபாய் கொடுக்கிறார்கள். ஓட்டுக்கு ரூ.5,000 வாங்கும் நீங்கள் அந்த பணத்தை 5 ஆண்டுகளுக்கு வைத்துக்கொண்டு ஒருநாளைக்கு ஒரு தேநீராவது குடிக்க முடியுமா?. பணத்துக்காக வாக்குகளை விற்றுவிடாதீர்கள்,வாக்குகளை விற்றால் கஷ்டப்பட வேண்டியது தான். கிராமசபை கூட்டத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானத்துக்கு அதிக அளவிலான ஆற்றல் உள்ளது. தலைவர்கள் தேவையில்லை, நிர்வாகிகள் தான் தேவை, அவர்களை தேர்ந்தெடுக்கும் கடமை மக்களுக்கு உள்ளது. சினிமாவில் வந்து பிரபலத்தை வைத்து வரவில்லை. நல்ல அடித்தளத்தை வைத்தே அரசியலுக்கு வந்துள்ளேன். நாட்டு மக்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவது அரசின் கடமை. ஆனால் அரசு எதையும் செய்யவில்லை” என கூறினார். 

Newstm.in 
 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close