தன்மானம் உள்ள கட்சிக்காரர்கள் சர்காரை பார்த்து கொதிக்கதான் செய்வார்கள்: முதலமைச்சர்

  ஐஸ்வர்யா   | Last Modified : 10 Nov, 2018 07:37 pm
cm-edappadi-palanisamy-press-meet

தன்மானம் உள்ள கட்சிக்காரர்கள் சர்காரை பார்த்தபின் கொதிக்கதான் செய்வார்கள் என முதலமைச்சர் பழனிசாமி கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, “18 எம்.எல்.ஏ.க்களால்தான் அவர்களது தொகுதி முடக்கப்பட்டுள்ளது. துரோகம் செய்த காரணத்தால் இறைவன் அவர்களுக்கு தக்க பாடம் புகட்டியுள்ளார். இந்த விவகாரத்தில் முதல் துரோகி டிடிவி. தேர்தல் பணிகளில் தொய்வு இல்லை. அனைத்து பணிகளும் நடைபெற்ற வருகிறது. தேர்தலில் தமிழகத்திற்கு யார் நன்மை செய்கிறார்களோ அவர்களுடன் கூட்டணி வைப்போம்.பாலாறு விவகாரத்தில் ஸ்டாலின் கேட்டாரா? வாய்ப்பு கிடைத்தும் கேட்கவில்லை. அதிகாரம், பதவி தான் முக்கியம். தன் மானம் உள்ள கட்சிக்காரர்கள் சர்கார் படத்தை பார்த்தபின் கொதிக்கதான் செய்வார்கள். அதிமுக 21 சதவித இலவச திட்டங்களைதான் மக்களுக்காக வழங்கியது. திமுக செய்த ஊழலை மறைப்பதற்காக அதிமுக மீது தவறான விமர்சனங்களை சுமத்தி வருகிறது.

அனைத்து மக்களின் ஆதரவும்இருந்ததால் காய்ச்சலை தடுக்க முடியும். நல்ல தண்ணீரை தேங்காமல் பார்த்துக்கொள்ளுங்கள். தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்வது ஒவ்வொருடைய கடமை. தண்ணீர் தேங்குவதால்தான் காய்ச்சல் உருவாகிறது. கமலுக்கு 64 வயது ஆகிறது திரைத்துறையில் ஓய்வுப்பெற்றதால், அரசியலுக்கு வந்துள்ளார். ஆனால் அரசியலில் அவருடைய நடிப்பு எடுப்படாது. கமலால் அவருடைய பிரச்னையையே தீர்க்க முடியவில்லை. பின் எப்படி அவரால் நாட்டை காப்பாற்ற முடியும்.” என்று கூறினார். 

Newstm.in 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close