உருவானது கஜா புயல்!

  Newstm Desk   | Last Modified : 11 Nov, 2018 10:03 am
weather-update-kajaa-storm

வங்ககடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியது. இந்த புயலுக்கு கஜா என பெயர் சூட்டப்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று அதிகாலை 5.30 மணியளவில் தாழ்வு மண்டலம் புயலாக மாறியது. வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து வரும் கஜா புயல் 2 அல்லது 3 நாட்களில் தமிழகத்தை நோக்கி நகர வாய்ப்புள்ளது. மேலும் 12 கி.மீட்டர் வேகத்தில் நகர்ந்து வரும் இந்த புயல் சென்னையில் இருந்து 990 கி.மீட்டர் தூரத்தில் உள்ளது. 

இந்த புயலால் வடதமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயலானது வட தமிழகம்- தெற்கு ஆந்திராவுக்கு இடையே கரையை கடக்கும். வரும் 15ம் தேதிஇந்த புயல் கரையை கடக்கும். 

கஜா என்றால் யானை என்று அர்த்தம். இந்த பெயரை அண்டை நாடான இலங்கை சூட்டி உள்ளது. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close