சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்வோரை தூக்கில் போட வேண்டும்: விஜயகாந்த்

  Newstm Desk   | Last Modified : 12 Nov, 2018 03:53 pm
vijayakanth-condemned-for-child-rape

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்வோருக்குத் தூக்குத்தண்டனை வழங்க வேண்டும் என தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக விஜயகாந்த் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “தருமபுரி மாவட்டம், சிட்லிங் மலைக்கிராமத்தைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள், பிளஸ் 2 மாணவியை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதையும், கடந்த வாரம் சேலம் மாவட்டத்திலும் 13 வயது மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்யப்படிருப்பதையும் தே.மு.தி.க சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன்.

இதுபோன்று தொடர்ந்து இந்த சம்பவங்கள் தமிழ்நாட்டில் நடந்துகொண்டிருக்கிறது. இந்த சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு உச்ச தண்டனையான தூக்கு தண்டனை கொடுத்தால் தான், இனிவரும் காலங்களில் இதுபோன்ற நிகழ்வுகள் நடக்காவண்ணம் தடுக்கமுடியும். எனவே ஆட்சியாளர்களும், நீதித்துறையினரும் இதை உடனடியாக கவனத்தில் எடுத்துக்கொண்டு கடுமையான தண்டனை வழங்கவேண்டும்” என விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close