நான் ஒன்றும் முட்டாள் கிடையாது: அசத்தும் ரஜினிகாந்த்

  Newstm Desk   | Last Modified : 13 Nov, 2018 01:04 pm
rajinikanth-clarification-to-press

ராஜீவ் கொலை குற்றாவளிகள் பற்றி தெரியாத அளவிற்கு தான் முட்டாள் இல்லை என்றும் பா.ஜ.க தான் பலம் வாய்ந்த கட்சி என்றும் ரஜனிகாந்த் போயஸ் கார்டனில் இன்று செய்தியாளர்களை சந்தித்த போது கூறினார். 

மேலும் அவர் பேசும் போது, "நேற்றைய செய்தியாளர்கள் சந்திப்பில் நான் 'எந்த  7 பேர்' என்று கேட்டதை மாற்றி தற்போது பலரும் பேசி வருகின்றனர். எனக்கு ராஜீவ் கொலை வழக்கில் கைதானவர்கள் குறித்து எதுவும் தெரியாது என்பது போன்ற மாயையை உருவாக்கி வருகின்றனர். அவர்களை பற்றி தெரியாத அளவுக்கு நான் ஒன்றும் முட்டாள் கிடையாது. நேற்று என்னிடம் கேட்கப்பட்ட கேள்வி சரியாக இல்லை. 7 பேர் விடுதலை குறித்து என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டார்கள், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதான 7 பேர் குறித்து என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டு இருந்தால் நான் சரியான பதிலளித்து இருப்பேன். 

பேரறிவாளன் பரோலில் வெளியே வந்த போது நான் அவருடன் 10 நிமிடங்கள் தொலைபேசியில் பேசி ஆறுதல் கூறினேன். தற்போது இந்த விவகாரம் குறித்து கவர்னர் தான் முடிவெடுக்க வேண்டும். என்னை பொறுத்தவரையில் அவர்களை மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்யலாம். 

இதே போல பா.ஜ.க குறித்து நேற்று கேள்வி எழுப்பி இருந்தனர். அதற்கு, எதிர்கட்சிகளுக்கு ஆபத்தான கட்சி பா.ஜ.க என்று தான் நான் கூறினேன். 10 பேர் சேர்ந்து ஒருவரை எதிர்த்தால் யார் பலசாலி என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். பாஜக ஆபத்தான கட்சியா என்பதை மக்கள் முடிவு செய்துகொள்வார்கள். நான் இன்னமும் அரசியலில் முழுமையாக இறங்கவில்லை எனவே பா.ஜ.க குறித்து என்னால் தற்போது கருத்துக் கூற முடியாது. . 

சினிமாவில் இருப்பவர்களும் என்ன கூற வேண்டும் என்ன கூற கூடாது என்று சில இருக்கிறது. இலவசங்கள் கொடுப்பதில் தவறில்லை. ஆனால் வாக்குகளுக்காக கொடுக்கப்படும் இலவசங்கள் தவறுதான். 2.0 படத்தை கர்நாடகாவில் வெளியிட அனுமதிக்க மாட்டோம் என சிலர் கூறி வருகின்றனர். இதுகுறித்து கர்நாடக அரசு பார்த்துக்கொள்ளும்" என்றார்.

முன்னதாக நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் போது ரஜனி பேசியவற்றை படிக்க: எந்த 7 பேர்?- ராஜீவ் கொலை குற்றவாளிகள் பற்றிய கேள்வியால் நெட்டிசன்களிடன் சிக்கிய ரஜினி

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close