இந்தியாவின் பெருமையையும் வலிமையையும் உயர்த்தும் தலைவர் மோடி- தம்பிதுரை!

  ஐஸ்வர்யா   | Last Modified : 13 Nov, 2018 05:48 pm
thambi-durai-press-meet

மோடியை பொறுத்தவரை உலகளவில் சிறந்த தலைவராக விளங்கி வருகிறார். இந்தியாவின் பெருமையையும் வலிமையையும் அவர் உயர்த்தி வருகிறார் என மக்களவைத் துணை சபாநாயகர் தம்பித்துரை தெரிவித்துள்ளார். 

திண்டுக்கல் மாவட்டம் கூம்பூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மக்களவை துணை சபாநாயகர் தம்பித்துரை,  “மோடியை பொறுத்தவரை உலகளவில் சிறந்த தலைவராக விளங்கி வருகிறார்.மேலும் இந்தியாவின் பெருமையையும் வலிமையையும் அவர் உயர்த்தி வருகிறார்.

இதனால் அவரை வீழ்த்துவதற்க்கு எதிர்கட்சிகள் சிலர் கூட்டணி சேர்ந்து கொண்டு இருக்கலாம். ஆனால் மக்கள் யாரை ஏற்று கொள்கிறார்களோ அவர்கள் ஆட்சி அமைக்கிறார்கள் அது தான் உண்மை. 

தமிழக அமைச்சரவை ஒரு தீர்மானம் நிறைவேற்றுகிறது அதனை ஆளுநரிடம் கொடுக்கப்பட்டு 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வைக்கபட்டுள்ளது. அது உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்தி கொண்டு இருக்கிறோம். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருக்கும் போதே சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு இவர்களை எல்லாம் விடுதலை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள். ஆளுநர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தான் எங்களது வேண்டுகோள், காலம் தாழ்த்துவது சரி அல்ல. 

சிவகாசி பட்டாசு தொழிற்சாலை காப்பாற்றப்பட வேண்டும். பொருளாதார சந்தையானது மற்ற நாடுகளால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு வருகிறது இந்தியாவின் சந்தையை சீனாதான் ஆக்கிரமித்து வருகிறது. சீன பொருள்களைதான் இங்கு அதிகமாக புழங்கி கொண்டு இருக்கின்றன. சிவகாசி பட்டாசு தொழிற்சாலை பாதிக்க காரணம் சீன பட்டாசு இந்தியாவில் குவிந்து பெரிய ஆபத்தாக இருக்கிறது. அதை மத்திய அரசு தடுக்க வேண்டும்” என்றும் தம்பித்துரை எடுத்துக் கூறினார்.

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close