விரைவில் ட்விட்டரில் எடிட் வசதி!

  ஐஸ்வர்யா   | Last Modified : 13 Nov, 2018 06:14 pm
twitter-is-still-working-out-how-an-edit-button-for-tweets

பிரபல சமூக வலைதளங்களில் ஒன்றான ட்விட்டரில் பதிவிடப்படும் ட்விட்களில் எடிட் செய்யும் வசதியை விரைவில் கொண்டுவர ட்விட்டர் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. 

இதுவரை ட்விட்டரில் பதிவிடப்படும் கருத்துகளை எடிட் செய்ய முடியாது. முற்றிலும் டெலிட் செய்துவிட்டு மறுபதிவு செய்ய வேண்டும் என்ற நிபந்தனை இருந்தது. இந்நிலையில் தற்போது ட்விட்டரில் எடிட் செய்யும் வசதியை வழங்குவது குறித்து பரிசீலனை செய்து, அதை சரியாக வழங்குவது குறித்து ஆலோசித்து வருவதாக ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த எடிட் தொழில் நுட்பத்தின் மூலம் மற்றவர்களின் ஐடியில் இருந்து தகவல்களை எடுக்க முடியாமல் இருக்கும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளது. 

கடந்த 2016ல் ட்விட்களுக்கு எடிட் பட்டன் வழங்குவதாக ட்விட்டர் தெரிவித்திருந்தது. ஆனால் தற்போது வரை அதிகுறித்த அறிவிப்பு ஏதுமில்லை. தற்போதுதான் எடிட் செய்வதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளது. தற்போது சமூக வலைதளங்களில் ட்விட்டரே பிரபலமாக இருக்கும் நிலையில், இந்த அம்சம் விரைவில் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Newstm.in 
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close