பெண்கள் போன்று நடந்துகொள்வதாக கிண்டல் செய்ததால் கொலை செய்ய முயற்சித்த மாணவன்!

  ஐஸ்வர்யா   | Last Modified : 13 Nov, 2018 06:16 pm
crime-story

அஜித் என்ற மாணவனை அஜய் என்ற சக மாணவர் லேடிஸ் போன்று நடப்பதாக கிண்டல் செய்ததாகவும், அதில் கோபம் அடைந்த அஜித் அவரை கடுமையாக எச்சரித்து உள்ளார். அதை மீறியும் கிண்டல் செய்ததால் கோபமடைந்த அவர், நண்பர்களுடன் இணைந்து கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். 

சென்னை அடுத்த மதுரவாயல்  மேட்டுக்குப்பம் பிராதன சாலை பாரதி மெட்ரிக்பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வரும் ஏரிக்கரையை சேர்ந்த அஜய் (19) என்ற  மாணவனை பள்ளி சென்றுவிட்டு வீடு திரும்பும் போது மூன்று பேர் கொண்ட கும்பல் தாக்கி அரிவாளால் வெட்டியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த அஜய் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்,. பின்னர் சம்பவம் தொடர்பாக சென்னை மதுரவாயல் காவல் நிலையத்தில் அஜய் பெற்றோர் புகார் அளித்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த உதவி கமிஷ்னர் ஜான்சுந்தர் தலைமையில் ஆய்வாளர் விஜயகுமார் விசாரணை மேற்கொண்டார். அதில் அஜய்யை அரிவாளால் வெட்டியது மதுரவாயல் ஏரிக்கரையை சேர்ந்த அஜீத் (19),நவீன்(18) மற்றும் கிஷோர்(18) என தெரிவந்தது.

இதில் கிஷோர் தலைமறைவான நிலையில் அஜித், நவீனை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அஜித்தை அஜய் லேடிஸ் போன்று நடப்பதாக கிண்டல் செய்ததாகவும், அதில் கோபம் அடைந்த அஜித், அவரை கடுமையாக எச்சரித்து உள்ளார். இதனால் கோபமடைந்த அஜித் தங்களது நண்பர்களுடன் சேர்ந்து அஜயை அரிவாளால் தலையிலும் முதுகிலும் வெட்டியதாக தெரிவித்துள்ளனர்.  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அஜய்க்கு தலையிலும் முதுகிலும் தலா 7 தையல்கள் போடப்பட்டு சிகி்ச்சை பெற்று வருகிறார். கைது செய்யப்பட்ட அஜித் மற்றும் நவீன் ஏரிக்கரை பகுதியில் வேலை ஏதும் இல்லாமல் ஊர் சுற்றி வருபவர்கள் எனவும் மூவர் மீதும் கொலை முயற்சி வழக்கு பதியப்பட்டுள்ளது. அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள கிஷோரை போலீசார் தேடி வருகின்றனர். மாணவனை அரிவாளால் வெட்டிய சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newstm.in 
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close