எஸ்.எஸ்.எல்.சி அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு

  Newstm Desk   | Last Modified : 14 Nov, 2018 09:57 am

10th-1-2-half-yearly-exame-schedule

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணையை பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ளது. 

அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிகுலேசன், ஆங்கிலோ இந்தியன், ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் சிறப்பு பள்ளிகளுக்கான எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி,

எஸ்.எஸ்.எல்.சி.

10-ந் தேதி  - தமிழ் முதல் தாள்

11-ந் தேதி - தமிழ் இரண்டாம் தாள்

13-ந் தேதி  - ஆங்கிலம் முதல் தாள்

14-ந் தேதி  - ஆங்கிலம் இரண்டாம் தாள்

17-ந் தேதி  - கணிதம்

18-ந் தேதி - விருப்ப பாடம்

19-ந் தேதி  - அறிவியல்

22-ந் தேதி - சமூக அறிவியல்

பிளஸ்-1

10-ந் தேதி  - தமிழ்

11-ந் தேதி - ஆங்கிலம்

12-ந் தேதி  - தகவல் தொடர்பு ஆங்கிலம், நெறிமுறைகள் மற்றும் இந்திய கலாசாரம், கணினி அறிவியல், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன், உயிரி வேதியியல், சிறப்பு மொழி (தமிழ்), மனை அறிவியல், அரசியல் அறிவியல், புள்ளியியல்.

14-ந் தேதி  - கணிதம், விலங்கியல், வணிகவியல், மைக்ரோபயாலஜி, நியூட்ரிசன் அண்ட் டைட்டிக்ஸ், ஜவுளி மற்றும் ஆடை வடிவமைப்பு, உணவு சேவை மேலாண்மை, வேளாண்மை அறிவியல், நர்சிங் (பொது), நர்சிங் (தொழிற்கல்வி).

17-ந் தேதி  - இயற்பியல், பொருளியல், கம்ப்யூட்டர் டெக்னாலஜி.

19-ந் தேதி  - உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம் மற்றும் புள்ளியியல், அடிப்படை எலக்ட்ரிக்கல் என்ஜினீயரிங், அடிப்படை எலக்ட்ரானிக் என்ஜினீயரிங், அடிப்படை சிவில் என்ஜினீயரிங், அடிப்படை ஆட்டோ மொபைல் என்ஜினீயரிங், அடிப்படை மெக்கானிக்கல் என்ஜினீயரிங், அலுவலக மேலாண்மை மற்றும் செக்கரட்டரிஷிப், டெக்ஸ்டைல் டெக்னாலஜி.

22-ந் தேதி - வேதியியல், கணக்குபதிவியல், புவியியல்.

பிளஸ்-2

10-ந் தேதி  - தமிழ்

11-ந் தேதி  - ஆங்கிலம்

12-ந் தேதி  - தகவல்தொடர்பு ஆங்கிலம், இந்திய கலாசாரம், கணினி அறிவியல், உயிரி வேதியியல், சிறப்பு மொழி (தமிழ்), மனை அறிவியல், அரசியல் அறிவியல், புள்ளியியல்.

14-ந் தேதி  - கணிதம், வணிகவியல், மைக்ரோபயாலஜி, விலங்கியல், நியூட்ரிசியன் அண்ட் டைட்டிக்ஸ், டெக்ஸ்டைல்ஸ் டிசைனிங், உணவு மேலாண்மை மற்றும் குழந்தைகள் பராமரிப்பு, வேளாண்மை நடைமுறைகள், நர்சிங் (தொழிற்கல்வி), நர்சிங் (பொது).

17-ந் தேதி - இயற்பியல், பொருளியல், ஜெனரல் மெஷினிஸ்ட், எலக்ட்ரானிக்ஸ் உபகரணங்கள், சிவில் வரைவாளர், எலக்ட்ரிக்கல் மெஷின்ஸ் மற்றும் அப்ளையன்சஸ், ஆட்டோ மெக்கானிக், டெக்ஸ்டைல் டெக்னாலஜி.

19-ந் தேதி  - உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம், அலுவலக மேலாண்மை, கணக்கு பதிவியல் மற்றும் தணிக்கை கோட்பாடு.

22-ந் தேதி  - வேதியியல், கணக்கு பதிவியல், புவியியல்.

இந்த அனைத்து தேர்வுகளும் காலை 10 மணிக்கு தொடங்கி, 12.45 மணி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.