பாலாறு பொருந்தலாறு அணையிலிருந்து, வரும் 23-ம் தேதி தண்ணீர் திறப்பு

  அனிதா   | Last Modified : 14 Nov, 2018 11:51 am

the-water-opening-on-the-23rd-from-the-palaru-porunthalaru-dam

பாசனத்திற்காக பாலாறு பொருந்தலாறு அணையிலிருந்து, வரும் 23-ம் தேதி தண்ணீர் திறந்துவிட முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். 

இது தொடர்பாக அவர் சார்பாக வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், " திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே உள்ள பாலாறு பொருந்தலாறு அணையிலிருந்து, பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிடுமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று, பொருந்தலாறு அணையிலிருந்து பழைய ஆறு அணைக்கட்டு கால்வாய்கள் மூலம் பாசனம் பெறும் நிலங்களுக்கு முறைப்பாசனம் மூலம் வரும் 23-ம் தேதி முதல் தண்ணீர் திறந்துவிட  உத்தரவிட்டுள்ளேன். இதனால், பழனி வட்டத்திலுள்ள 4,162 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்" என அறி்வித்துள்ளார்.  

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close