தஞ்சையில் 25 இடங்களில் நிவாரண முகாம் - அமைச்சர் துரைக்கண்ணு

  ஐஸ்வர்யா   | Last Modified : 15 Nov, 2018 07:04 pm
minister-durai-kannu-press-meet

தஞ்சாவூர் மாவட்டத்தில் 25 இடங்களில் புயல் நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. கஜா புயலினால் பாதிக்கப்படும் பொதுமக்கள் தங்குவதற்கு நிவாரண முகாம் பாபநாசத்தில் அமைக்கப்பட்டுள்ளது என அமைச்சர் துரைக்கண்ணு தெரிவித்துள்ளார். 

புயல் காரணமாக அமைக்கப்பட்டுள்ள முகாமினை வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை ஆகியோர் பார்வையிட்டனர். அதன்பின் பாபநாசத்தில் செய்தியாளர்களிடம் பேசிய வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு, “தஞ்சாவூர் மாவட்டத்தில் 25 இடங்களில் புயல் நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. கஜா புயலினால் பாதிக்கப்படும் பொதுமக்கள் தங்குவதற்கான நிவாரண முகாம் பாபநாசத்தில் அமைக்கப்பட்டுள்ளது. புயல் தொடர்பான பாதிப்புகளில் இருந்து மக்களை பாதுகாக்க தேவையான  அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. கஜா புயலின் தாக்கம் இன்று  இரவு 9 மணி அளவில் இருந்து தெரியும் என்பதால் பொதுமக்கள் விரைந்து அவரவர் இடங்களுக்கு செல்லுமாறு காவல்துறையினர் கும்பகோணம் நகர் முழுவதும் ஒலிபெருக்கி மூலம் தெரிவித்து வருகின்றனர்” என்று கூறினார். 

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close