மீனவர்கள் மற்றும் மீன்பிடி சாதனங்கள் பாதுகாப்பு குறித்த நடவடிக்கைகள்

  டேவிட்   | Last Modified : 16 Nov, 2018 01:22 am
gaja-press-release-from-govt-of-tamilnadu

மீனவர்கள் மற்றும் மீன்பிடி சாதனங்கள் பாதுகாப்பு குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, தமிழ்நாடு மீன்வளத் துறை சிறப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில், கஜா புயல், கடலூர், நாகப்பட்டினம், பாம்பன் இடையே கரையினைக் கடக்கும் என மண்டல வானிலை ஆராய்ச்சி நிலையம் எச்சரித்துள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதன் தொடர்ச்சியாக கடலூர், நாகப்பட்டினம் மற்றும் பாம்பன் பகுதிகளில் உள்ள சுமார் 281 மீனவ கிராமங்களில் மீன்வளத்துறை அதிகாரிகள் கள ஆய்வு செய்து சுமார் 4300 மீன்பிடி விசைப்படகுகள் மற்றும் 7000 நாட்டு படகுகள் பத்திரமாக உள்ளது என தகவல் அளித்துள்ளனர். அனைத்து கடலோர மாட்டங்களிலும் மறு உத்தரவு வரும் வரை முழுமையாக மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

கஜா புயல் பாதிப்புகள் மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள மாவட்டம் வாரியாக நீச்சல் வீரர்கள் மற்றும் படகு உரிமையாளர்கள் தயார் நிலையில் உள்ளனர். 

மீனவர்களின் பாதுகாப்பினை மேலும் உறுதி செய்திட, தமிழ்நாடு மீன்வளத்துறை, மத்திய அரசின் புவி அறிவியல் அமைச்சகத்தின் தேசிய கடலோர ஆராய்ச்சி நிலையம் மற்றும் இந்திய வானிலைத் துறை ணைந்து தூண்டில் எனும் கைபேசி செயலி வெளியிடப்பட்டு, அதன் செயல்பாடு தொடங்கப்பட்டுள்ளது. 

மேலும், புயல் பாதிப்புகளை கண்காணித்து உரிய நடவடிக்கைகள் மற்றும் நிவாரணம் இணைந்து மேற்கொள்ள ஏதுவாக அனைத்து கடலோர மாவட்ட நிர்வாகமும், மீன்வளத்துறை அதிகாரிகளும் களப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறு அந்த அ்றிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close