6 மணி நேரத்தில் கஜா வலுவிழக்கும்!

  Newstm Desk   | Last Modified : 16 Nov, 2018 05:09 am
gaja-will-weaken-in-6-hours

நாகப்பட்டினம் அருகே கரையை கடந்து வரும் கஜா புயல், இன்னும் 6 மணி நேரத்தில் வலுவிழக்கும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்தரின் தெரிவித்துள்ளார்.

நள்ளிரவு 12.30 மணி முதல் 2.30 மணிக்குள், கஜா புயலின் கண் பகுதி கரையை கடந்ததாக செய்தியாளர்களிடம் பாலச்சந்திரன் தெரிவித்தார். 100-110 கிமீ வேகத்தில் காற்று வீசி வருவதாகவும் கூறினார். இன்னும் 2 மணி நேரங்களில், கஜா புயல் முழுவதும் கரையை கடக்கும் என்றும், 6 மணி நேரம் வரை புயல் தீவிரமாகவே இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். கஜா புயல் கரையை கடந்ததை தொடர்ந்து, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் சூறைக்காற்றுடன் மழை பெய்தது. வேதாரண்யம், கடலூர், நாகப்பட்டினத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த சேதம் ஏற்பட்டாலும், இதுவரை உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஆர்.பி உதயகுமார், கஜா புயலை 100% பாதுகாப்பாக எதிர்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார். அரசிடம் இருந்து அடுத்த அறிவிப்பு வரும் வரை மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close