அரிய கலை நூல்களை பதிப்பிக்க விரும்புவோரா? ஊக்கத்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

  Newstm Desk   | Last Modified : 16 Nov, 2018 12:31 pm
stimulus-for-authors-and-art-institutions

தமிழில் கருத்தாழமிக்க அரிய கலை நூல்களை பதிப்பிக்கவும், புதிய நாட்டிய-நாடகங்கள் தயாரித்து மேடையேற்றம் செய்யவும் வழங்கப்படும் தமிழக அரசின் நிதியுதவி பெற விரும்புவோர் வரும் டிசம்பர் 28ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் வெளியிட்டுள்ள செய்தியில், தமிழகத்தில் கலை சார்ந்த நூல்களை எழுதும் நூலாசிரியர்களை ஊக்குவிக்கும் வண்ணம், கருத்தாழமிக்க அரிய தமிழ் நூல்களை பதிப்பிக்க, நூல் ஒன்றுக்கு ரூ.2 லட்சம் வீதம்  5 நூல்களுக்கு ரூ.10 லட்சம் வழங்கிடும் திட்டத்தை தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் மூலம் நிறைவேற்றிட தமிழக அரசு ஆணையிட்டுள்ளது. இதேபோல், தமிழில் சிறந்த நாட்டிய நாடகங்களை உருவாக்கி மேடையேற்றம் செய்யும் கலை நிறுவனங்களுக்கு தலா ரூ.75,000 வீதம் இரண்டு புதிய நாட்டிய நாடகங்களுக்கு ரூ.1.50 லட்சம் நிதியுதவி வழங்கவும் ஆணையிட்டுள்ளது. 

இந்த திட்டங்களின் கீழ் பங்கு பெற விரும்பும் நூலாசிரியர்கள் மற்றும் கலை நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 28.12.2018 மாலை 5 மணி. விண்ணப்பதாரர்கள்,  தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம், 31, பொன்னி, பி.எஸ்.குமாரசாமி ராஜா சாலை, சென்னை -28. (044-24937471) என்ற முகவரியை தொடர்பு கொண்டு விண்ணப்பத்தை பெற்றுகொள்ளாம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கஜா Live update: புயலால் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம்- முதல்வர் அறிவிப்பு

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close