கஜா புயல்: 9 மாவட்டங்களில் போர்க்கால அடிப்படையில் மின் சேதங்களை சீரமைக்கும் பணி

  டேவிட்   | Last Modified : 16 Nov, 2018 06:44 pm
gaja-tangedco-s-action-in-9-districts

கஜா புயலால் 9 மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள மின் சேதங்களை சீரமைக்கும் பணியில் 11,371 பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள் போர்க்கால அடிப்படையில் ஈடுபட்டுள்ளதாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் அறிவித்துள்ளது.

கஜா புயலின் காரணமாக நாகப்பட்டினம், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், திண்டுக்கல், விழுப்புரம், கடலூர், தேனி, சிவகங்கை ஆகிய 9 மாவட்டங்களில் மின் வழித்தடங்கள், மின் கம்பங்கள், மின் மாற்றிகள், துணை மின் நிலையங்கள் ஆகியவை சேதமடைந்துள்ளன. இதனையடுத்து இன்று காலை முதல் மின் கம்பங்கள் மற்றும் மின் கம்பிகள் மீது சாய்ந்து விழுந்த மரங்கள் மற்றும் மரக்கிளைகள் அகற்றப்பட்டு மின் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் அறிவித்துள்ளது. 

மேலும், மின் சீரமைப்புப் பணியில் அந்தந்த மாவட்டங்களைச் சேர்ந்த 7776 மின் பணியாளர்களும், பிற மின் வட்டங்களில் இருந்து சிறப்பு பணிக்காக அனுப்பப்பட்ட 3400 மின் பணியாளர்களும் 195 அலுவலர்களும் சேர்ந்து மொத்தமாக 11371 நபர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அனைத்து பகுதிகளுக்கும் விரைவில் சீரான மின் விநியோகம் வழங்கிட போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருதாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் அறிவித்துள்ளது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close