வாழை மரங்களை அடியோடு சாய்த்த கஜா!

  ஐஸ்வர்யா   | Last Modified : 16 Nov, 2018 07:46 pm
gaja-strom

கஜா புயலால் உண்டான காற்றால் பெரம்பலூர் அருகே 400க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் மற்றும் மக்காச்சோளம் பயிர்கள் சாய்ந்து நாசமாகின.

தமிழகத்தில் கஜா புயல் தாக்கத்தால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இதனிடையே பெரம்பலூர் அருகே குரும்பலூரில் கஜா புயல் காற்றால் 400க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் அடியோடி சாய்ந்து நாசமாகின. மேலும் குரும்பலூரில் வாழை விவசாயம் செய்து வருபவர் பால்ராஜ். இவரது வாழை தோப்பில் 1500க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் பொங்கல் பண்டிகைக்காக அறுவடை தருணத்தில் தார்விட்ட நிலையில் காய்த்திருந்தது. இதனிடையே நேற்று இரவு கஜா புயலின் தாக்கம் பெரம்பலூரில் ஏற்படுத்தியது. இவரது தோப்பில் இருந்த 400க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சாய்ந்தது. இதன் மதிப்பு 2 லட்ச ரூபாய்க்கு மேல் இருப்பதாக வேதனையோடு தெரிவிக்கிறார் பால்ராஜ். மேலும் அரசு நடவடிக்கை எடுத்து நஷ்ட ஈடு வழங்க வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளார். மேலும் பெரம்பலூர் மாவட்டத்தில் பெருமளவு சாகுபடி செய்யப்படும் மக்காச்சோளம் பயிர் இந்த ஆண்டு பருவ மழையை எதிர்பார்த்து பயிரிட்டனர். இதனிடையே கஜா புயல் காற்று மக்காச்சோள பயிரினையும் விட்டு வைக்கவில்லை. பூ விட்டு கதிர் வைக்கும் நேரத்தில் நாசமானதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். அரசு உரிய நடவடிக்கை எடுத்து பயிர் நிவாரணம் வழங்க வேண்டுமென்றும் கிராம மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

இதை மிஸ் பண்ணாதீங்க...

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close