கார்த்திகை தீபம் : சென்னையில் இருந்து 1,000 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

  Newstm Desk   | Last Modified : 17 Nov, 2018 09:01 am
karthikai-deepam-1-000-special-buses-operating-from-chennai

கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி வரும் 22, 23 ஆகிய தேதிகளில் சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கவுள்ளதாக அரசு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. 

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் கார்த்திகை தீபத் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த ஆண்டு கடந்த 14ம் தேதி கார்த்தி தீப திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இவ்விழாவின் முக்கிய நிகழ்வான தீபத் திருவிழா வரும் 23ம் தேதி நடைபெறவுள்ளது.

இத்திருவிழாவை காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருவதுண்டு. பக்தர்களின் வசதிக்கேற்ப சென்னை, திருச்சி, விழுப்புரம், வேலூர், புதுச்சேரி, கடலூர், பெரம்பலூர், விருத்தாச்சலம், கள்ளக்குறிச்சி, சேலம், காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் சுமார் 3,000 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

அதன்படி சென்னையில் இருந்து 1,000 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. இதில் சென்னை கோயம்பேட்டில் இருந்து 750 சிறப்புப் பேருந்துகளும், தாம்பரத்தில் இருந்து 250 சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்படவுள்ளதாகவும் போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. இந்தப் பேருந்துகள் வரும் 22, 23 ஆகிய தேதிகளில் மக்களின் தேவைக்கேற்ப இயக்கப்படும் எனவும், மக்கள் கூட்டம் அதிகரித்தால், சிறப்புப் பேருந்துகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தப் பேருந்துகளுக்கு முன்பதிவு  இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close