கோவை - சேலம் பயணிகள் ரயில் சனிக்கிழமைகளில் ரத்து

  Newstm Desk   | Last Modified : 17 Nov, 2018 09:35 am
coimbatore-salem-passenger-train-canceled-on-4-saturdays

கோவை - சேலம் பயணிகள் ரயில் இன்று முதல் 4 சனிக்கிழமைகளில் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "கோவை - சேலம் இடையே தினசரி இயக்கப்பட்டு வரும், பயணிகள் ரயில்கள் 66602, 66603 ஆகியவை நிர்வாகக் காரணங்களுக்காக நவம்பர் 17, 24, டிசம்பர் 1, 8 ஆகிய 4 சனிக்கிழமைகளில் மட்டும் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.  

இதேபோல், பாலக்காடு  பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் ரயில்வே பணிகள் காரணமாக கோவை - திருச்சூர் பயணிகள் ரயில் (எண் 56650) நவம்பர் 17, 19, 21 ஆகிய தேதிகளில் பகுதி ரத்து செய்யப்படுகிறது. கோவையிலிருந்து ஷோரனூர் வரை மட்டுமே இயக்கப்படும். ஷோரனூர் - திருச்சூர் இடையே ரயில் சேவை ரத்து செய்யப்படுகிறது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close