'மீண்டும் சபரிமலைக்கு வருவேன்' - திருப்தி தேசாய் உறுதி!

  Newstm Desk   | Last Modified : 17 Nov, 2018 10:49 am
will-come-back-says-activist-trupti-desai-as-she-returns-home

நேற்று சபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டதையடுத்து, சமூக ஆர்வலர் திருப்தி தேசாயை உள்ளே விடாமல் ஐயப்ப பக்தர்கள் தடுத்தனர். இதையடுத்து அவர் திரும்பிச் சென்றார். அப்போது அவர் மீண்டும் வருவேன் என்று கூறியுள்ளார். 

அனைத்து வயது பெண்களும் சபரிமலை செல்லலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது இந்து அமைப்புகள் மத்தியில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.  சபரிமலைக்குள் பெண்களை அனுமதிக்கக்கூடாது என ஐயப்ப பக்தர்கள் தொடர் போராட்டம் நடத்தி, கோவிலுக்கு வரும் பெண்களை தடுத்தனர். 

இதையடுத்து கார்த்திகை மாத பூஜைக்காக நேற்று ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது. அப்போது சபரிமலை சந்நிதானம் செல்ல முயன்ற பெண்களை பக்தர்கள் மற்றும் இந்து அமைப்பினர் கோஷமிட்டு தடுத்தனர். சமூக செயற்பாட்டாளர் திருப்தி தேசாய் உள்ளிட்ட ஆறு பெண்கள் கொச்சி விமான நிலையத்துக்கு வந்தனர். ஆனால் அவர்களை வரவிடாமல் ஐயப்ப பக்தர்கள் தடுத்து நிறுத்தினர்.பல மணி நேரங்களாக இந்த போராட்டம் நடைபெற்ற நிலையில், திருப்தி தேசாய் வேறு வழியில்லாமல் திரும்பிச் சென்றார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "என்னை தடுத்து போராட்டம் நடத்தியவர்கள் பக்தர்கள் அல்ல. போராட்டக்காரர்கள் எப்படி பக்தர்களாக இருக்க முடியும். சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படக் கூடாது என நான் நினைக்கிறேன். நான் சபரிமலை செல்வதற்காகத்தான் வந்தேன். மீண்டும் வருவதற்காகத்தான் திரும்பிச் செல்கிறேன். எனக்கு கொலை மிரட்டல் விடுத்தார்கள். இந்த நூற்றாண்டிலும் பெண்களுக்கான உரிமைகள் மறுக்கப்படுகிறது’’ என்றார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close