மீண்டும் அரங்கேறிய ஆணவப் படுகொலை? பெண்ணின் தந்தை கைது!

  ஐஸ்வர்யா   | Last Modified : 17 Nov, 2018 05:17 pm
krishnagiri-honour-killing-case-update

கிருஷ்ணகிரியை சேர்ந்த காதல் ஜோடி ஆணவப் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், பெண்ணின் தந்தை உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே உள்ள சூடைக் காந்த பள்ளி எனும் கிராமத்தைச் சார்ந்த சுவாதியும், நந்தீஸ் என்பவரும் காதல் புரிந்து, கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு ஊரைவிட்டுச் சென்று திருமணம் செய்துகொண்டார்கள். திருப்பூரில் தங்கியபடி இருவரும் வாழ்க்கை நடத்தி வந்துள்ளனர்.

 இதற்கிடையில் இந்த வாரம் இருவரும் காணாமல் போனார்கள். கடந்த 13 தேதியன்று, நந்தீஸும் சுவாதியும் கர்நாடகா மாண்டியா பகுதியில் காவேரியில் பிணமாக கரை ஒதுங்கியுள்ளனர். உள்ளூர் மக்கள் காவல் துறைக்கு தகவல் கொடுக்க, உடலைக் கைப்பற்றி விசாரணை செய்து அவர்கள் இருவரும் சாதிமறுப்பு திருமணம் செய்துகொண்ட நந்தீஸ்-சுவாதி இணையர்கள்தான் என்பதை கண்டறிந்தது கர்நாடக காவல்துறை. 

பிணக்கூறாய்வு மூலம், இருவரும் அடித்துக் கொல்லப்பட்டிருப்பதும், சுவாதி மூன்றுமாதக் கர்ப்பிணி என்பதும் கண்டறியப்பட்டுள்ளன. ஒசூர் அருகே உள்ள புணுக்கன் தொட்டியைச் சார்ந்த ஒரு ரௌடியின் மூலம் சுவாதியின் பெற்றோர்கள் இக்கொலையை நடத்தியிருக்கிறார்கள் என்று தகவல்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக 6 பேர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீஸார், பெண்ணின் தந்தை உள்ளிட்ட 3 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், தலைமறைவாக உள்ள மற்றவர்களைப் பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close