தமிழக அரசு மீட்புப்பணிகளை மேலும் துரிதப்படுத்த வேண்டும்: தமிழிசை

  Newstm Desk   | Last Modified : 19 Nov, 2018 11:00 am
tamilisai-press-meet

கஜா புயல் மீட்பு பணிகளை தமிழக அரசு மேலும் துரிதப்படுத்த வேண்டும் என தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை கூறியுள்ளார்.

தமிழக டெல்டா மாவட்டங்களான நாகை,தஞ்சை, திருவாரூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் கஜா புயல் புரட்டிப் போட்டுள்ளது. இதனால் அப்பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து தமிழிசை சௌந்தரராஜன் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "கஜா புயல் மீட்பு பணிகளை தமிழக அரசு இன்னும் துரிதப்படுத்த வேண்டும். பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் அத்தியாவசிய பொருட்களை மக்களுக்கு வழங்க தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்" என்றார். 

மேலும், "கஜா புயல் மீட்பு பணி விவகாரத்தில் யாரும் அரசியல் செய்யக்கூடாது. மதம்,ஜாதியின் பெயரால் பாஜக மக்களை பிரித்தாள்வதாக கனிமொழி, திருமாவளவன் போன்றோர் கூறுவது அடிப்படை ஆதாரமற்ற குற்றம்சாட்டு" என தெரிவித்தார். 

newstm.in

 

 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close