எங்கப்பா நம்ம டிவிய காணோம்?... அமைச்சர் தேடல்!

  ஐஸ்வர்யா   | Last Modified : 18 Nov, 2018 05:40 pm
dindigul-srinivasan-asks-for-new-j-channel-mic

செய்தியாளர்கள் சந்திப்பில் நியூஸ் ஜே தொலைக்காட்சியின் மைக் இல்லாததை பார்த்து அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் எங்கப்பா நம்ம டிவிய காணோம் என கூறிய வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. 

திண்டுக்கல் மாவட்டத்தில், கஜா புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஆய்வு செய்தார். அங்கு மீட்பு பணிகளை துரிதமாக மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், “அனைத்து தொலைக்காட்சிகளின் மைக்களின் பேரையும் பட்டியலிட்டார். அப்போது அதிமுக-வின் அதிகாரப்பூர்வ ‘நியூஸ் ஜே’ செய்தி தொலைக்காட்சியின் மைக் இல்லாததை பார்த்து எங்கப்பா நம்ம விய காணோம்... அருகிலிருந்த நிருபர்கள் கொண்டு வருவார்கள் என கூறவே, மைக் இல்லையென்றாலும் பராவியில்லை, குறைந்தப்பட்சம் தொலைக்காட்சியின் பெயரை பேப்பரில் எழுதி வைக்குமாறு கேட்டுக்கொண்டார். திண்டுக்கல் சீனிவாசன் பேசிய இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. மேலும் புயலால் டெல்டா மாவட்டங்களே சீரழிந்து கிடக்கும் நிலையில் அமைச்சர் ”தனது டிவி” மைக்கை தேடுவது நெட்டிசன்கள் மத்தியில் கடுங்கோபத்தை ஏற்படுத்தியுள்ளது

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close